Shadow

புத்தகம்

தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

சினிமா, புத்தகம்
தமிழ்த் திரைப்பட உலகின் பவழ விழா ஆண்டு 2006 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அக்டோபர் 31, 1931 இல், தமிழின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' வெளியானது. அன்றிலிருந்து, தமிழ் சினிமாவில் முதன் முதலாக நிகழ்ந்த சிறப்புகளைத் தொகுத்து, 'தமிழ் சினிமாவின் முதல்வர்கள்' என்ற புத்தகத்தை 2006 இல் எழுதியுள்ளார் திரைப்படப் பத்திரிகை தொடர்பாளரான பெரு.துளசி பழனிவேல். மொத்தம் 28 சிறப்புமிகு படங்களைப் பற்றிச் சுருக்கமாக தந்துள்ளார். இப்புத்தகம், திரைப்படப் பிரியர்களுக்கான ஒரு பொக்கிஷச் சேமிப்பு. காதலையும், தமிழ்ப்படங்களையும் பிரிக்கவே முடியாதோ என்று கதி கலங்கும்படி, வசவசவெனக் காதல் படங்களை உருவாக்கித் தள்ளுகின்றது தமிழ்த் திரைப்பட உலகம். அலுக்கவே அலுக்காமல் தமிழ்த் திரையுலகம் காதல் படங்களை எடுப்பதும், எங்களுக்குச் சலிக்கவே சலிக்காதெனப் பார்வையாளர்கள் அவற்றைக் கொண்டாடுவதும் ஒரு தொடர் கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு,...
சேவல்களம் – ஒழுக்கத்தைத் தரும் ராஜபோதை

சேவல்களம் – ஒழுக்கத்தைத் தரும் ராஜபோதை

புத்தகம்
சுபமாய் அல்ல, பரம சுபமாய் முடிகிறது சேவல்களம் நாவல். அந்நிறைவைப் புறந்தள்ளி, மனம் குறையைத் தேடத் துவங்கி விடுகிறது. அகத்தின் நிலைகுலைவு, வாழ்வு தரும் ரணம் என கண் மூடி அனுபவிக்க நாவலில் ஏதுமில்லாமல் போவதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு வெறுப்போ, கசப்போ, வன்முறைச் செய்கையோ மனித மனதிற்குத் தேவைப்படுகிறது. ‘சமூகக் கட்டுப்பாடுகளாலும், நாகரீகத்தினாலும் தற்காத்துக் கொள்ளும் மனித மனம், தனது ஆழ்மன வன்முறை உணர்ச்சிகளுக்கு உபத்திரவம் இல்லாத வடிகால்களைத் தேடிக் கொள்ளும்’ என்கிறது உளவியல். இதையே தான் காலந்தொட்டு செய்தி ஊடகங்கள் செய்து வருகின்றன. இதை, எழுத்தாளர் சுஜாதா தன் பாணியில், “நல்ல செய்தி கொடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். ரேட்டிங் விழுந்துவிடும்” எனச் சொல்லியுள்ளார். அதுவும் இன்றைய நேரடி விவாதக்களக் காலத்தில், மனிதர்கள் மீதான அவநம்பிக்கையைப் பரப்புவது என்பது முற்றிய நிலையில் இருக்கிறது. அதன் ...
1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்

1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்

புத்தகம்
1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப் பற்றிய கதை மிகப் பிரபலமானது. நோய்வாய்ப்பட்டிருந்த கணித மேதை ராமானுஜரை அவரது நண்பர் ஹார்டி மருத்துவமனையில் பார்க்கப் போவார். அப்பொழுது, தான் வந்த டேக்ஸியின் நம்பரான 1729 இல் எந்தச் சுவாரசியுமும் இல்லை என அலுத்துக் கொள்வார் ஹார்டி. நோயுற்று, படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்த ராமானுஜர், சட்டென உற்சாகமாகி அந்த எண்ணின் சிறப்பைச் சொல்லுவார்.      என்பதே அதே! ஹார்டி இதை வெளியுலகிற்கு விவரித்த பின், 1729 என்பது 'ராமானுஜன் - ஹார்டி எண்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. இந்த நாவலுக்கு, இந்த எண்ணை விடப் பொருத்தமான தலைப்பு வேறென்ன இருக்க இயலும்!? 80 பக்க நாவல் தான் என்றாலும் படிக்க அவ்வளவு சிரமமாக உள்ளது. முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச்செல்வன், "பல இடங்களில் கண்களில் நீர் திரையிட வாசித்தேன். சில இடங்களில் மேற்கொண்டு தொடர்ந்து...
திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

சினிமா, புத்தகம்
'திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் தொல்காப்பியன். "சரிகமபதநி" எனும் ஏழு ஸ்வரங்களைப் போல 7 தலைப்புகளில் தொல்காப்பியன், தன் மேன்மைத் தமிழில் , அவருடைய உளவியல் பார்வையைப் படரவிட்டு, சமூகம், கலை, பண்பாடு ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி மிகச் சிறந்த ஆய்வுப் புத்தகத்தைப் பொருத்தமான நேரத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புத்தகம் ஒரு 'சினிமா அறிவியல் (Cinema Science)' புத்தகம் என்ற வகைப்பாட்டில் முதன்மைப்படுத்தி வைக்கலாம். ஓர் எழுத்தாளன் எழுத்துக்களை எப்படிக் கோர்த்து எழுதவேண்டும் என்பதற்கு இந்தப் புத்தகமே சரியான முன்னுதாரணம். முனைவர் பட்டம் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட புத்தகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு அற்புதமான செய்திகளைத் தாங்கி நிற்கிறது. சினிமாவைப் பற்றிய புரிதலும் ஆர்வமும், அதன் மீது கொண்ட காதலும் வெறியும், ஒரு சே...
சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

கதை, புத்தகம்
“ஒரு கொடி செஞ்சு கொடு, அண்ணாச்சி.” “என்ன கொடி கேக்கிறே” அலுப்புடன் முகத்தைத் திருப்பிக் கேட்கிறான் பாண்டியன். ஓடிப்போய்த் தன் மூன்றாம் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறான் கருப்பையா. ஒரு பக்கத்தைத் தன் அண்ணனிடம் நீட்டிக் காட்டுகிறான். தேசக் கொடி என்று தலைப்பு; வர்ணம் எதுவும் இல்லாமலே காகிதத்தின் வெண்மையிலும், அச்சு மையின் கருமையிலும் ‘மூவர்ண’க் கொடியின் படம் அந்தப் பக்கத்தில் இருக்கிறது. “இந்தக் கொடி செஞ்சுகொடு, அண்ணாச்சி. நாளைக்கு இஸ்கூலுக்குக் கொண்டுக்கிட்டுப் போகணும். நாளைக்கு எல்லாரும் கொண்டுக்கிட்டுப் போகணும்” என்று சொல்லுகிறான் கருப்பையா. அவன் முகத்தில் களிப்பும் ஆர்வமும் மின்னுகின்றன. இருபக்கமும் கூராக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிறத் துண்டுப் பென்சில் ஒன்றினால் சுவரில் உழவு நடவுக் கணக்குக் குறித்துக் கொண்டிருக்கும் பாண்டியன், “இரு, வாறேன்” என்று மேலும் சிறிது நேரம் சில எண...
இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்!

இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்!

புத்தகம்
ஜூன் 16 ஆம் நாள் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் நினைவு தினம். 1976 இல் மறைந்த இவரது நினைவுகளைக் கடந்த சில வருடங்களாக இதுதமிழ் தளத்தில் பகிர்ந்து வருகிறேன். சொல்வதற்கு ஏராளமாக இருந்தாலும், என்னுள் இருக்கும் சில மனக்குறைகளை இக்கட்டுரையின் வாயிலாக இப்பொழுது பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். ஒருமுறை எழுத்தாளர் திலீப் குமாருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, தமிழ் எழுத்துலகில் மிகவும் குறைந்த மதிப்பீடுகளுக்கு உள்ளானவர் கிருஷ்ணன் நம்பி என வருந்திச் சொன்னார். மதிப்பீடு செய்த சில எழுத்தாளர்களும் நம்பியைச் சரியாக மதிப்பீடு செய்தார்கள் எனச் சொல்லமுடியாது. அந்த எழுத்தாளர்கள் வரிசையில் வண்ணநிலவன், அசோகமித்திரன் போன்றவர்களைச் சொல்லலாம். சுந்தர ராமசாமி, நம்பியின் மிக அணுக்க நண்பராக இருந்தும் கூட, நம்பியின் சிறுகதைகள் பற்றிய அவரது விமர்சனங்கள் ஏமாற்றத்தையே அளிக்கிறது. இந்த மூவரில், அசோகமித்திரன...
ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்

ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்

புத்தகம்
மிகவும் பிரபலமான குழந்தைகள் எழுத்தாளரும் ஓவியருமான ப்யாட்ரிகஸ் பாட்டரின் கதைகளை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர் வானம் பதிப்பகம். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதியின் மிக எளிமையான மொழிபெயர்ப்பு இந்நூலின் பெரும் வரபிரசாதம். ஒரு மொழிபெயர்ப்பினைப் படிக்கிறோம் என்ற அயற்சியைத் தராமல் நேரடி தமிழ்க் கதையைப் படிப்பது போல் உள்ளது சிறப்பு.  1866 ஆம் ஆண்டு பிறந்த ஹெலன் ப்யாட்ரிக்ஸ் பாட்டரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவரது வயதினையொத்த சிறுவர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. பிராணிகளை வளர்ப்பது தான் அவரது முன் இருந்த ஒரே பொழுதுபோக்கு. இங்கிலாந்தில் பிறந்த அவரது விடுமுறைக் காலம் இயற்கை எழில் கொஞ்சும் ஸ்காட்லாந்தில் கழிந்தது. இத்தகைய சூழலில் வளர்ந்தவர், பின்னாளில் ‘ஹெர்ட்விக் ...
மரப்பாச்சி பொம்மையின் சாகசம்

மரப்பாச்சி பொம்மையின் சாகசம்

புத்தகம்
செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல். சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின் சிறுவர் நூலான 'ஆமை காட்டிய அற்புத உலகம்' போல், மரப்பாச்சியும் மிக மிக முக்கியமான சமூக விஷயமொன்றைத் தொடுகிறது. பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல் (Good touch, Bad touch) பற்றி மிக எளிமையானதொரு புரிதலை ஒரு கதையின் மூலம் உருவாக்குகிறது. நல்ல, கெட்ட என்ற சொல்லுக்கு மாற்றாக பாதுகாப்பான, பாதுகாப்பாற்ற எனும் சொற்களைப் பாலபாரதி பயன்படுத்தியுள்ளது சிறப்பாய் உள்ளது. தனக்கு நேருவதைப் பெற்றோர்களிடம் சொல்லவே பூஜா தயங்கும் பொழுது, மரப்பாச்சிப் பொம்மை அவளுக்கு க்யூட்டாய் உதவுகிறது. உதவுவதோடு அல்லாமல், மரப்பாச்சியான செஞ்சந்தன இளவரசி பூஜாவ...
பேட்டை – தமிழ்ப்பிரபா

பேட்டை – தமிழ்ப்பிரபா

புத்தகம்
சென்னை பற்றி மற்றவர்கள் பார்வை என்பதே எள்ளலும் கிண்டலுமாக தான் இருக்கும். இது வாழ்வதற்குத் தகுதியான இடமில்லை, ஊரு முழுக்க நாற்றமெடுக்கும் கூவத்துக்கு நடுவில் குடியிருக்க முடியாது, சுற்றுபுறம் மிகவும் கெட்டுவிட்டது, சென்னையைச் சுற்றி வாழும் சேரி மக்கள் பேசும் பாஷை சகித்துக் கொள்ள முடியாது என இன்னும் பல இத்யாதிகள். இப்படித் தூற்றி கொண்டே பல இடங்களில் இருந்து சென்னையில் பகுசாகக் குடியேறியவர்களின் பல கேலி கிண்டலுக்கு மத்தியில் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டு, முன்னர் சேரியாகவும் இன்று ஹெளசிங் போர்டில் வாழும் மக்களின் கதையை தான் பேட்டை (சிந்தாதிரிப்பேட்டை) பேசுகிறது. சிந்தாதிரிப்பேட்டை எப்படி உருவாகுகிறது என்பதில் இருந்து நாவல் தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்து அசுர வேகத்தில் முடிவடைகிறது. பல இலக்கிய நாவல்களில், எழுத்தாளர்கள் தங்கள் ஊர்களில் பேசும் வட்டார வழக்குகளை நமக்குக் கடத்தியது போலவே இங்கு ச...
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

புத்தகம்
Paulo Coelho, Haruki Murakami, Orhan Pamuk என பிறமொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை நாம் நம்மில் ஒருவராக அறிந்திருப்பதற்குக் காரணம் அப்புத்தகங்களின் தரமான ஆங்கில மொழிபெயர்ப்பே. நம்மிடம் நோபல் பரிசு வாங்குவதற்கு உகந்த தரம் மிக்க எழுத்தாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் யாராலும் கண்டுபிடிக்கப்படாத குகைச் சித்திரங்களைப் போல் அறியப்படாமல் இருப்பது மனவேதனையைத் தரும் விஷயம். இக்குறையைப் போக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே “ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)” ஆகும். சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை ப்ரபாகர், மதன் ஆகியோருடைய புத்தகங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு முதற்கட்டமாக வெளிவர இருக்கின்றன. இந்திரா செளந்திரராஜன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் நாவல்கள் மொழிபெயர்ப்பில் உள்ளன. சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், ல.ச.ரா, கு.அழகிரிசாமி, புதுமைப...
எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

அரசியல், கட்டுரை, சினிமா, புத்தகம்
ஈராக்கில் பணி புரியும் ஐ.நா. சபை அதிகாரியான ஆர்.கண்ணன், “MGR: A Life” எனும் புத்தத்தை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா, 2017 ஜூலை 8ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. புத்தகத்தை பாராளமன்ற உறுப்பினர் திரு. சசி தரூர் வெளியிட, எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவரான திரு.இராம.வீரப்பன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய சசி தரூர், “நானும் எம்.ஜி.ஆரின் ஊரான பாலக்காட்டைச் சேர்ந்தவன் தான். எனது குழந்தைப் பருவத்தின் ஹீரோ அவர். என் சகோதரர்களுடன் பல எம்.ஜி.ஆர். படங்களை ரசித்திருக்கிறேன். எம்.ஜி.ஆர். தான் இந்திய அரசியலில் சாதித்த முதல் சினிமா சூப்பர் ஸ்டார். தமிழ்நாட்டில், தேசிய கட்சிக்கும், மாநில கட்சிக்கும் இருந்த அரசியல் போட்டியை, மாநில கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக மற்றியவர் எம்.ஜி.ஆர். முப்பது வருடங்கள் முடிந்த பிறகும், எங்களையும் (காங்கிரஸ்) சேர்த்து எந்தத் தேசியக் கட்சிகளாலும்...
வெட்டாட்டம் நாவல் – ஒரு பார்வை

வெட்டாட்டம் நாவல் – ஒரு பார்வை

கட்டுரை, புத்தகம்
நாவலின் முதல் அத்தியாத்தைப் படித்து முடித்து இரண்டாம் அத்தியாத்திற்குள் சென்று விட்டால், 266 பக்கங்களையும் வாசித்த பின்பே தான் கீழே வைக்க முடியும். அப்படி ஒரு விறுவிறுப்பான கதை. மிகத் தேர்ந்த கதைசொல்லியாக, சுவாரசியமான நடையில் நாவலைப் படைத்துள்ளார் ஷான் கருப்பசாமி. கதையின் ஜானர் ஒரு பொலிடிக்கல் த்ரில்லர். மக்களின் மனங்களை வசீகரத்த நடிகரான வினோதன் தோல்வியே காணாத முதல்வராகப் பதவியில் வீற்றிருக்கிறார். அவர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நேரத்தில், ராஜினாமா செய்து முதல்வர் பதவியை மகன் வருணுக்குத் தற்காலிக ஏற்பாடாகத் தாரை வார்த்துக் கொடுக்கிறார். அதில் துளியும் விருப்பமில்லாமல், 'மூன்று வாரம் பல்லைக் கடித்துக் கொள்ளலாம்' என வேண்டாவெறுப்பாகக் கவர்னரைச் சந்தித்து பதவி பிரமாணம் எடுக்கிறான் வருண். வினோதனுக்குப் பாதகமாகத் தீர்ப்பு வருகிறது; தலைநகரத்துக்குக் குடிநீர் தரும் பிரம்மாண்டான ஏரிகளில...
கருவியாலஜி – சிறுவர் பொக்கிஷம்

கருவியாலஜி – சிறுவர் பொக்கிஷம்

புத்தகம்
"கருவியாலஜி" - பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம். அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும், நாம் சார்ந்திருக்கும் கருவிகளின் கதையைப் பற்றிச் சொல்கிறது புத்தகம். 1958இல் 17 கிலோவாக இருந்த கால்குலேட்டர் எப்படி இன்று பாக்கெட்க்குள் அடங்குமளவு பரிமாண வளர்ச்சி பெற்றது? முதல் கால்குலேட்டரோ மணல் லாரி சைஸில் இருந்துள்ளது. இப்படியாக இரண்டாம் பக்கத்தில் தொடங்கும் சுவாரசியம் கடைசி பக்கம் வரை நீள்கிறது. செல்ஃபோனுக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் உள்ள வித்தியாசமென்ன? சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பயன்பாடுகளென்ன? புல்லட் ரயில்களின் வேகமென்ன? அவை எவ்வாறு இயங்குகின்றன எனப் பக்கத்திற்குப் பக்கம் தகவல்கள். ஏ.டி.எம்., மைக்ரோ ஓவன், பேஸ் மேக்கர், டச் ஸ்க்ரீன், ரோபோட் என நீளும் பட்டியலில், பென்சில் சீவும் ஷார்ப்னருக்கும் கோட்டா ஒதுக்கியுள்ளார் ஆயிஷா இரா.நடராசன். தொடக்கத்தில் ஒரு மே...
கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

கட்டுரை, புத்தகம்
ஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கும் வியாசபுரியை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும். அந்நாட்டில், கற்றல் என்பது கதைகளைப் படிப்பது மூலமாக மட்டுந்தானாம். அதாவது பள்ளிகளில் கதைகளை மட்டுமே சிலபஸாக உடைய நாடு அது. வாவ்! அந்நாட்டின் இளவரசன் ஒரு சாபம் காரணமாக சுண்டைக்காயாக மாறி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழகத்துச் சிறுவன் சூர்யா கையில் சிக்குகிறான். ‘சுண்டைக்காய் இளவரசன்’ எனும் சிறுவர் நாவலின் கதைக்கரு இதுதான். கதைக்குள் கதையென, சூர்யாவிற்கு இளவரசன் மூன்று மாயாஜாலக் கதைகளைச் சொல்கிறான்.இந்தப் புத்தகத்தை சிறுவர்களுக்கு வாங்கித் தருவதில் ஒரு சின்ன சிக்கலுள்ளது. இளவரசன் அறிமுகமாகித் தன்னைப் பற்றிச் சூர்யாவிடம் சொல்லி முடித்ததும், அவனது நண்பர்கள் “வெடி தேங்காய்” பற்றிச் சொல்லி, அதன் செய்முறையையும் சுவையையும் பற்றிச் சிலாகித்துச் சொல்கிறார்கள். படிக்கும் எவருக்கும் எச்சில் ஊறச் செய்யும். சிறுவர...
இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க!

இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க!

கட்டுரை, புத்தகம்
விவசாயத் தொழிலை சிமென்ட் ஆலைகளிடம் காவு கொடுத்துவிட்ட வறண்ட நிலப்பரப்பினைச் சேர்ந்த ஒருவரின் நினைவு மீட்டல்களே இண்ட முள்ளு எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆனால், கதைகளோ விவசாயம் செழிப்பாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. தனது பால்யத்தில் கேட்டுப் பழகிய அரியலூர் மாவட்டப் பேச்சு வழக்கிலேயே அனைத்து வரிகளையும் எழுதியுள்ளார் அரசன். முதல் வாசிப்பின் பொழுது, அப்பேச்சு மொழி அந்நியமாக இருப்பதால், நம்மருகிலேயே அரசன் அமர்ந்து தனது ஊரைப் பற்றியும் அதன் மனிதர்கள் பற்றியும் அரூபமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் பிரமை எழுகிறது. ஒரு வாசகனாக கதையின் மாந்தர்களோடு உலாவ சற்றே சிரமமாக உள்ளது. வழி தவறிய சாந்தியின் பின்னால் போய், ‘என்ன? ஏது?’ என்று விசாரிக்கலாம் எனப் பார்த்தால், அரசன் நம் கையைப் பிடித்து இழுத்து, “அவங்க தான் சாந்தி. அவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு” என விடாமல் கதை சொல்கிறார். தொகுப்பில் மொத்தம் ஒன்பது சிற...