எவொலூஷன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ப்ளூபெர்ரி ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டிவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “காட்டேஜ்”. நான்கு கதாபாத்திரங்களோடு, காட்டேஜ் பின்னணியில் பரபரக்கும் புதுமையான திரைக்கதையில், அசர வைக்கும் த்ரில் பயணமாக் அமையும் ‘காட்டேஜ்’.
ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன், அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி த்ரில்லர் தான் காட்டேஜ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முழுக்க முழுக்க ஊட்டியின் பின்னணியில், நடக்கும் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் ஊட்டியில் 25 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு.
இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி புகழ் KPY நவீன் முரளிதர் நாயகனாக அறிமுகமாகிறார். ஆரியா செல்வராஜ் நடிக்கிறார். கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி, ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழு:
>> தயாரிப்பு நிறுவனம் – எவொலூஷன் என்டர்டெயின்மென்ட்
>> இணை தயாரிப்பு – ப்ளூபெர்ரி ஸ்டுடியோஸ்
>> எழுத்து & இயக்கம் – சதீஷ் கீதா குமார் & நந்தினி விஸ்வநாதன்
>> ஒளிப்பதிவு & படத்தொகுப்பு – சதீஷ் கீதா குமார்
>> இசை – செந்தமிழ்
>> பாடல்கள் – கு.கார்த்திக்
>> ஸ்டன்ட் – டேன்ஜர் மணி
>> கலை – தினேஷ் மோகன்
>> உடைகள் – அக்ஷியா & விஷ்மியா
>> மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)