Shadow

Tag: Evolution entertainment

காட்டேஜ் – மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்

காட்டேஜ் – மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
எவொலூஷன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ப்ளூபெர்ரி ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டிவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “காட்டேஜ்”. நான்கு கதாபாத்திரங்களோடு, காட்டேஜ் பின்னணியில் பரபரக்கும் புதுமையான திரைக்கதையில், அசர வைக்கும் த்ரில் பயணமாக் அமையும் ‘காட்டேஜ்’. ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன், அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி த்ரில்லர் தான் காட்டேஜ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஊட்டியின் பின்னணியில், நடக்கும் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் ஊட்டியில் 25 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. இயக்குநர்கள் சதீஷ...