32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தேவரா | பயத்தின் கடவுள் | அநிருத்

Dinesh R சேலம் Published: 19/05/2024 2 நிமிட வாசிப்பு Songs
எழுத்து அளவு:

மாஸ் நாயகன் என்டிஆரின் ‘தேவரா’ திரைப்படத்தில் இருந்து அநிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் ‘ஃபியர் சாங்’ (fear song) தற்போது வெளியாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மாஸ் நாயகன் என்டிஆர் நடித்த ‘தேவரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் உலக அளவில் பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகமான ‘தேவரா பார்ட் 1’ தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

என்டிஆர் பிறந்தநாள் கொண்டாட்டமாகப் படத்தில் இருந்து ‘ஃபியர் சாங்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள முதல் பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அனிருத் பாடியிருக்க, சந்தோஷ் வெங்கி கன்னடம் மற்றும் மலையாளத்தில் பாடியிருக்கிறார். தெலுங்கில் சரஸ்வதி புத்ரா ராமஜோகய்யா சாஸ்திரி, தமிழில் விஷ்ணு எடவன், ஹிந்தியில் மனோஜ் முண்டாஷிர், கன்னடத்தில் வரதராஜ் மற்றும் மலையாளத்தில் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்தப் பாடலை எழுதியுள்ளனர். என்டிஆரின் ரசிகர்களுக்கு, அவரது பிறந்தநாள் அன்று இப்பாடல் வெளியாகி செம ட்ரீட்டாக அமைந்துள்ளது. அநிருத்தின் காந்த குரலும், என்டிஆரின் வலுவான திரையிருப்பும், ‘பயத்தின் கடவுள்’ என இந்தப் பாடலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கதாநாயகனாக என்டிஆர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘தேவரா’ திரைப்படம் என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்க, நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே படத்தின் தயாரிப்பாளர்கள். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவாளராகவும், சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.