32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

திகங்கனா சூர்யவன்ஷி @ தனுசு ராசி நேயர்களே

Dinesh R சேலம் Published: 09/07/2019 2 நிமிட வாசிப்பு Updated: 11/07/2019 சினிமா
எழுத்து அளவு:

Digangana-Suryavanshi

தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்குப் பதிலாக பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்தியை உறுதி செய்த இயக்குநர் சஞ்சய் பாரதி கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை நாயகிகளில் ஒருவராகப் பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது. இருப்பினும், நடிகை ரியா அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. இரு தரப்பிலும் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்த போதிலும், நாங்கள் இறுதியாக ஒரு பரஸ்பர முடிவை எடுத்தோம். இப்போது, பாலிவுட் நடிகை திகங்கனா சூரியவன்ஷி அவருக்குப் பதிலாக நடிக்கிறார்.

திகங்கனாவின் சமீபத்திய தெலுங்கு திரைப்படமான ஹிப்பி படத்தின் ட்ரைலரைப் பார்த்தேன். அவரது ஸ்க்ரீன்-ப்ரெசன்ஸால் ஈர்க்கப்பட்டேன். விரைவில், நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதையை விவரித்தேன். அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டதால், படப்பிடிப்பு மீண்டும் முழுவீச்சில் துவங்கும்” என்றார்.

தனுசு ராசி நேயர்களே படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை திரைப்படம். ஜோதிடத்தை நம்பும் நாயகன் ஹரிஷ் கல்யாண், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் அதை வைத்தே எடுக்கிறார் என்பதே கதை.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.