32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

டபுள் மாஸாக ‘டபுள் இஸ்மார்ட்’

Dinesh R சேலம் Published: 15/05/2023 2 நிமிட வாசிப்பு Updated: 19/05/2023 Movie Posters
எழுத்து அளவு:

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் “டபுள் இஸ்மார்ட்”. மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘இஸ்மார்ட் ஷங்கர்’ திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றவுள்ளார். உஸ்தாத் ராம் பொதினேனி பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக (மே 15) படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு “டபுள் இஸ்மார்ட்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாகம் முதல் பாகத்தைக் காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோக்கைக் கொண்டிருக்கும் வகையில் ஓர் அதிரடியான கதையைப் பூரி ஜெகன்நாத் எழுதியுள்ளார். இது மிகப் பிரம்மாண்டமாக மிகப் பெரும் பட்ஜெட்டில் உயர்தர தொழில்நுட்பத் தரத்துடன் தயாரிக்கப்படவுள்ளது.

டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரில் திரிசூலங்கள் ரத்தம் தெறிக்கக் காட்சியளிக்கிறது. டபுள் இஸ்மார்ட் திரைப்படம் பான் இந்தியா வெளியீடாக, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மகா சிவராத்திரிக்கு மார்ச் 8, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

நடிகர்கள்:

>> ராம் பொதினேனி

தொழில்நுட்பக் குழு:

>> எழுத்து இயக்கம் – பூரி ஜெகன்நாத்
>> தயாரிப்பு – பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்
>> தயாரிப்பு நிறுவனம் – பூரி கனெக்ட்ஸ்
>> சி.ஈ.ஓ. – விசு ரெட்டி
>> மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் (AIM)

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.