32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Doctor Strange in the Multiverse of Madness விமர்சனம்

Dinesh R சேலம் Published: 06/05/2022 2 நிமிட வாசிப்பு Updated: 18/07/2022 அயல் சினிமா
எழுத்து அளவு:

மார்வெல் படங்கள் வெளியாகும் நாட்கள் உலகெங்கும் திருவிழா கோலம் பூண ஆரம்பித்துவிட்டது. ஒரே படத்திலேயே, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மக்கள் மனதைக் கவர்ந்துவிட்டார். பெனிடிக்ட் கம்பர்பேட்சின் நடிப்பும் அதற்கொரு பிரதானமான காரணம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பல்லண்டத்திற்கிடையே பயணிக்கும் திறனுள்ள அமெரிக்கா சாவேஸ் எனும் இளம்பெண்ணை, ஒரு ஆக்டோபஸ் மிருகம் துரத்தி வருகிறது. வேற பிரபஞ்சத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அப்பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்துவிடுகிறார். அமெரிக்கா எனும் அந்தப் பெண், நாம் வாழும் பிரபஞ்சத்திற்கான (Earth 616) பாதையைத் திறந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்.

இந்தப் பிரபஞ்சத்தின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அம்மிருகத்தைக் கொன்று அமெரிக்கா சாவேஸைக் காப்பாற்றுகிறார். மந்திரங்களில் பரீச்சயமான வாண்டா மேக்ஸிமாஃப் –இடம் உதவி கோருகிறார் டாக்டர். ஆனால், ஆக்டோபஸ் மிருகத்தை அனுப்பியதே ஸ்கார்லட் விட்ச் ஆக மாறிவிடும் வாண்டா தான் எனத் தெரியவருகிறது. மிகவும் சக்தி வாய்ந்த வாண்டா மேக்ஸிமாஃபைச் சமாளிக்க முடியாமல், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அமெரிக்கா சாவேஸுடன் வேறொரு பிரபஞ்சத்திற்குத் (Earth 838) தப்பிச் செல்கிறார். அங்கு, கைது செய்யப்படும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், எப்படி Earth 616 இல் இருக்கும் வாண்டா மேக்ஸீமாஃபைச் சமாளித்து, அமெரிக்க சாவேஸைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

மாயாஜால விஷுவல் ட்ரீட்கள். உதாரணத்திற்கு ஒரு பிரபஞ்சத்தில், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வெறும் வண்ணக்கலவையாக (Paint) உள்ளார். இது போல் படமெங்கும் கற்பனையின் பிரம்மாண்டம். டார்க்ஹோல்ட் எனும் புத்தகத்தைப் பயன்படுத்தி பிளாக் மேஜிக்கை மேற்கொள்ளும் வாண்டா மேக்ஸிமாஃபைத் தடுக்க, புக் ஆஃப் விஷாந்தி எனும் வொயிட் மேஜிக் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டும். அப்புத்தகம் கிடைக்கப்பெறாத பட்சத்தில், எப்படி பிளாக் மேஜிக்கைப் பயன்படுத்தியே பயன்படுத்தியே வாண்டா மேக்ஸிமாஃபைத் தடுக்கிறார் என அற்புதமாக க்ளைமேக்ஸை உருவாக்கியுள்ளனர். மார்வெல் மேஜிக் இப்படத்திலும் வொர்க் ஆகியுள்ளது. ஆனாலும் முதல் பாகத்தின் க்ளைமேக்ஸின் கிளாஸிக்தன்மைக்கு அருகில் வராது என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

முதல் பாகத்தினைப் போலவே, கலகலப்பிற்குப் பஞ்சமில்லாத படம். ஏனெனினும் கதையின் போக்கில் சுவாரசியத்தைக் கூட்டுவதை விட, கதாபாத்திரத்தின் தன்மையை ஜாலியாகக் கொண்டு போவதிலேயே கவனம் செலுத்தியுள்ளார் இயக்குநர் சாம் ரெய்மி.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.