Shadow

Fourth Floor – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் த்ரில்லர்

மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் L.R. சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர த்ரில்லர் திரைப்படம் “ஃபோர்த் ஃப்ளோர்” ஆகும். தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் ஆகியோர் இப்படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளனர்.

சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத த்ரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L.R. சுந்தரபாண்டி.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனனும், நாயகியாக தீப்ஷிகாவும் நடிக்கிண்றனர். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ‘போடா போடி’ படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இசையமைத்துள்ளார். ‘போடா போடி’, ‘வெண்ணிலா கபடி குழு’ படங்களின் ஒளிப்பதிவாளர் J. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அநீதி’, ‘ஜெயில்’ மற்றும் ‘மத்தகம்’ வெப் சீரிஸிற்குக் கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார். ‘சாமி 2’, ‘பென்குயின்’ படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் திவ்யா இப்படத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

தொழில்நுட்பக் குழு:-

இயக்கம் – L R சுந்தரபாண்டி
தயாரிப்பு – A.ராஜா
நிர்வாக தயாரிப்பாளர் – சூரிய பிரகாஷ் P
ஒளிப்பதிவு – J. லக்ஷ்மன்
இசையமைப்பாளர் – தரண் குமார்
பாடலாசிரியர் – கு. கார்த்திக்
படத்தொகுப்பு – ராம் சுதர்ஷன்
கலை – சுரேஷ் கல்லேரி
நடனம் – அபு சால்ஸ்
சண்டை – டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு – A. ராஜா