32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Good Bad Ugly விமர்சனம் | GBU review

Dinesh R சேலம் Published: 10/04/2025 2 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 இது புதிது
எழுத்து அளவு:

அஜித்தின் விசிறிகளை மகிழ்விப்பதற்கென்றே படத்தை எடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். மாஸாக அஜித்தைக் காட்ட, படத்தின் கதையில் அதற்கான தருணங்களை உருவாக்காமல், ஃப்ரேம்க்கு ஃப்ரேம் மாஸ் தெரியவேண்டும் என்ற எளிய சூத்திரத்தைக் கையிலெடுத்து, முழுப் படத்தையும் 139 நிமிட மெகா ரீல்ஸாகக் கொடுத்துவிட்டார் ஆதிக்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ரெட் டிராகன் எனும் டானாகிய AK, நல்ல தந்தையாக மகனைச் சந்திக்க வேண்டுமெனச் சட்டத்தின் முன் சரணடைகிறார். அவர் சிறையில் இருந்து வெளியாகும் பொழுது, மகனோ ஸ்பெயின் சிறையில் அடைப்படுகிறார். மகனைக் காப்பாற்ற AK மீண்டும் ரெட் டிராகன் ஆவதுதான் கதை.

‘அவர் யார் தெரியுமா? ரெட் டிராகன் யார் தெரியுமா? AK யார் தெரியுமா?’ என வில்லன் அர்ஜுன் தாஸைத் தவிர அத்தனை பேரும் படம் நெடுகே கேட்டு, அவரது புகழைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ‘அசாஸின் ஜான்விக்கைக் காப்பாத்தினவர், கொரியன் டான் டோங் லீயே AK-வின் தைரியத்தைப் பாராட்டி ரெட் டிராகன் பட்டம் கொடுத்தார், ஃப்ரொஃபஸருடன் இணைந்து மணி ஹீஸ்ட் பிளான் பண்ணவர்’ என அஜித்தை ஒரே தூக்காகத் தூக்கிக் கொண்டாடுகிறார் ஆதிக். ஆனால் அதைக் கதையாகப் பண்ணாமல் வசனங்களாகவும், சில நொடி அனிமேஷனாகவும் கடந்துள்ளனர். சண்டைக் காட்சிகளும் அட்ரீலனை உசுப்பும் மாஸ் சண்டைகளாக இல்லாமல் வீடியோ கேமிற்குள் சிக்கிக் கொண்டதனைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது. அநிருத்தைச் சிங்கிள்ஸ்க்கு அழைக்கும்வண்ணம் காதைப் பதம் பார்க்கும் அதிர்வான பின்னணி இசையை இட்டு நிரப்பி வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். இது, அற்புதமான பின்னணி இசையைத் தரக்கூடிய ஜி.வி.யின் குறையன்று. தன் படங்களுக்கு இப்படியான ஒலி வடிவமைப்பில் பின்னணி இசை வேண்டுமெனக் கேட்டு வாங்குவது ஆதிக்கின் பாணி.

மேலும், தேவா, வித்யாசாகர், இளையராஜா, அநிருத் ஆகியோர் பாடல்களுக்குப் பிரதான கதாபாத்திரங்கள் ரீல்ஸ்க்கு ஆடிக் கொண்டுள்ளனர். க்ளைமேக்ஸ் காட்சியில் கூட சண்டை போட மறந்து பழைய பாடல்களுக்கு வைப் செய்து கொண்டுள்ளனர். சில சமயம், பழைய பாடல்களுக்கு கலர் கலர் டிரஸ் போட்டு ஆடிக் கொண்டிருக்கும் கோலிவுட் ஆண்டு விழாக்குப் போன மாதிரி இருக்கிறது. பெரிய பெரிய துப்பாக்கிகளை நாயகர்கள் பயன்படுத்துவதுதான் தற்போதைய ட்ரெண்ட். அஜித்க்குக் கார் பிடிக்கும் என்பதால் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல ஒரு காரைச் சண்டைக்காட்சியில் கொண்டு வந்து விடுகிறார் ஆதிக். அதனால் அஜித் ஹேப்பி, அவரைப் போலவே, கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அஜித் ரசிகர்களும் கொண்டாட்ட மனநிலையில் ஹேப்பியோ ஹேப்பியாக இருக்க, God Bless Tamil Cinema!

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.