Shadow

கொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி

dr-anitha

புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், புற்றுநோய் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஒரு கருத்தரங்கை நிகழ்த்தினார்.

“கொரோனா தொற்றுக் காலத்தில், சமூகத்தில் மருத்துவர்களான நமது பங்கு அளப்பரியது. அதிலும் குறிப்பாகப் புற்றுநோய் துறை மருத்துவர்களுக்கு, கூடுதல் பொறுப்பு உள்ளது. நாம், மத்திய மற்றும் மாவட்ட அரசுகள் வழிகாட்டுதல்களை அறிந்து கொண்டு, அது படி நடக்கவேண்டியது நம் கடமையாகும்.

கொரோனா யொற்றுக் காலத்தில், புற்றுநோய்க்கான சிகிச்சைகளை முன்னிலைப்படுத்தி இயங்க இயலாது. எனினும் நாம் நம் முக்கியத்துவத்தை உணர்ந்து, எளிதில் பாதிப்படையக் கூடிய புற்றுநோய் பிணியாளர்களின் பொருட்டு சரியாகத் திட்டமிடவேண்டும்.

சில கேன்சர் நோயாளிகளுக்குக் கொரோனா தோற்று ஏற்பட்டால், அவர்கள் மீதான நோயின் தாக்கம் மிகவும் அதிகமாகும்.

• கீமோதெரபி அல்லது ரெடியோதெரபி எடுத்துக் கொள்பவர்கள்,

• ரத்தப்புற்று (Leukaemia), எலும்பு மஜ்ஜைப் புற்று (Bonemarrow cancer), நிணநீர்த் திசுப் புற்று (Lymphoma), எலும்புநல்லிப் புற்று (Myeloma) ஆகிய பாதிப்புகள் எந்த ஸ்டேஜில் உள்ளவர்கள்,

• நோய்த்தடுப்பாற்றல் சிகிச்சை (Immunotherapy) அல்லது கேன்சருக்கு எதிரான மற்ற எதிர்புரத சிகிச்சை antibody treatments) எடுப்பவர்கள்,

• கேன்சருக்கெனப் பிரத்தியேக சிகிச்சை முறைகளை மேற்கொள்பவர்கள்,

• கடந்த ஆறு மாதங்களில் எலும்பு மஜ்ஜை (bone marrow) அல்லது தண்டு உயிரணு (stem cell) மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்,

• இம்யூனோசப்ரஷன் மருந்து எடுத்துக் கொள்பவர்கள்,

• நோய் பாதிப்பிற்கான பல்வேறு காரணிகளைக் கணித்து, 60 வயதுக்காரர்கள், இதயநோய்க்காரர்கள், சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள்,

ஆகியோருக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம்.

பாதிப்பின் அளவைப் பொறுத்து, மருத்துவர்கள் புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். பல்துறை சார்ந்த மருத்துவர்கள் குழுவுடன் விவாதித்து, முடிவுகளை எடுக்கவேண்டும். நோய் பாதிப்பின் அளவைப் பொறுத்து, நோயாளிகளை வகைப்படுத்தவேண்டும்.

அறுவை சிகிச்சை நோயாளிகள்

முன்னுரிமை நிலை 1அ

• மிக அவசர சிகிச்சை: உயிரைக் காக்க 24 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப் படவேண்டிய அறுவை சிகிச்சை

முன்னுரிமை நிலை 1ஆ

• அவசர சிகிச்சை: 72 மணி நேரத்திற்குள் மெற்கொள்ளப் படவேண்டிய அறுவை சிகிச்சை

முன்னுரிமை நிலை 2

அறுவை சிகிச்சையின்றி 4 வாரங்களுக்குள் குணமாகுமளவுள்ள பாதிப்பைப் பற்றி பல்துறை மருத்துவர்களுடன் விவாதித்து முடிவெடுப்பது.

சிஸ்டெமிக் ஆன்ட்டி-கேன்சர் ட்ரீட்மென்ட்

ஒவ்வொரு நோயாளியின் பாதிப்பு பற்றியும் தனித்தனியே தீவிரமாய் ஆராய்ந்து சிகிச்சை முறைகளைப் பற்றித் தீர்மானிக்கவேண்டும்.

ரேடியேஷன் தெரபி

தெரபியைத் தவிர்க்க முடியாதளவு, நோய் முற்றியிருந்தால் மட்டுமே தெரபிக்கு நோயாளிகளை அழைப்பது.

இவற்றைத் தவிர்த்து, சில பொதுவான வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.

1. அத்தியாவசியமான மருத்துவ ஃபோலோ-அப்களைத் (follow-up) தவிர்த்து மற்ற அப்பாயின்ட்மென்ட்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

2. ஒரே இடத்தில், கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே வந்து நோயாளிகள் கூட்டமாகக் காத்திருப்பதைத் தடுக்க, நோயாளிகளைத் தங்கள் காரிலேயே காத்திருக்கச் செய்து, அவர்களிம் முறை வரும் பொழுது தொலைபேசியில் அழைப்பது.

3. மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சையில் மூழ்கியிருக்கும் பொழுது, வீட்டிலேயோ அல்லது பாதுகாப்பான வெளியிடங்களிலேயோ, புற்றுநோய் பாதிப்பாளர்களைச் சந்திக்க வசதி ஏற்படுத்துதல்.

4. வாய்ப்புள்ளவர்கள் வீடியோ கான்ஃப்ரென்ஸிங் முறையில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதை ஊக்குவித்தல். முக்கியமான ஃபோலோ-அப் தேவைப்படுபவர்களுக்கு.

இப்படியாக, கொரோனா காலத்தில் சமூகப் பரவலைத் தடுக்க நாம் திட்டமிடுவதோடு, நோயாளிகளுக்கும் அவசியமான சிகிச்சையையும் தடங்கலின்றி வழங்க நாம் நோயாளிகளுடன் கலந்தாலோசித்து தீர்க்கமாகத் திட்டமிட வேண்டும்” என்றார் புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ்.