32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஹனுமான் டீசர் – 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள்

Dinesh R சேலம் Published: 06/12/2022 2 நிமிட வாசிப்பு Updated: 08/12/2022 அயல் சினிமா
எழுத்து அளவு:

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்தியத் திரைப்படமான ‘ ஹனு-மான்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் சாதனையைப் படைத்திருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் தமிழ் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.‌ படத்தின் டீசர், தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. டீசரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும் வசீகரத்துடன் இருந்தது. டீசரில் ஹனுமானின் அறிமுகம் அனைவரையும் கவர்ந்தது. இதற்காக இயக்குநர் பிரசாத் வர்மாவிற்கு பிரத்தியேகமான பாராட்டுகள் குவிந்து வருகிறது. இளம் நட்சத்திரமான தேஜா சஜ்ஜா சூப்பர் ஹீரோவாக அவருடைய தோற்றத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனிடையே ஹனுமான் படத்தின் டீசர் வெளியான குறுகிய காலக்கட்டத்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. அதனுடன் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் ‘லைக்ஸு’ம் வழங்கப்பட்டிருக்கிறது. இது திரையுலகில் சாதனையாக கருதப்படுகிறது. அத்துடன் இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா, ஹனுமான் முன் கையில் சூலாயுதத்துடன் நிற்பது போன்ற போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டீசரில் இடம் பெற்றிருக்கும் கிராஃபிக்ஸ் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள், இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது என்பதனை நிரூபித்திருக்கிறது.

ஹனுமான் திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கௌரவ் ஹரி – அனுதீப் தேவ் – கிருஷ்ணா சௌரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கலை இயக்கத்தை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா வடிவமைத்திருக்கிறார். ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ‘ஹனுமான்’ படத்தின் வெளியிட்டு தேதியைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.