32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கோடீஸ்வரி – இரட்டை வேடங்களில் கே.ஆர்.விஜயா

Dinesh R சேலம் Published: 25/02/2019 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

k-r-vijaya-doble-act

ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கோடீஸ்வரி” என்று பெயரிட்டுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தக் குடும்பக்கதை படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இவர் இரட்டை வேடமேற்று இருக்கிறார். இளம் நாயகனாக A.மோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாகக் காவல்துறை அதிகாரி வேடத்தில் ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரிந்த எஸ்.ஏ.மஸ்தான் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகிகளாக் அஷ்மா, சுப்ரஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, முத்து, அஞ்சலி, ஸ்டாலின், ரமேஷ், பரமசிவம் எல்.ஆர்.விஜய், கோடீஸ்வரன் மாணிக் ஆகியோர் நடிக்கிறார்கள். தர்மதுரை என்ற வித்தியாசமான வேடத்தில் சேலம் கே.முருகன் மற்றும் துரை ஆனந்த், C.கருணாநிதி, ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சாய் இளவரசன். இவர் ஆர்.கே.செல்வமணி, டி.பி.கஜேந்திரன், கலைமணி, E.ராம்தாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சேலம், ஏற்காடு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

>> ஒளிப்பதிவு – A.S.ராஜ்
>> இசை – தாமஸ் ரத்னம்
>> படத்தொகுப்பு – ராம் நாத்
>> பாடல் – நந்தலாலா

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.