32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக்

Dinesh R சேலம் Published: 18/07/2025 2 நிமிட வாசிப்பு Teaser
எழுத்து அளவு:

பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன், ஜீ.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எ.ம் கார்த்திக், ‘சிங்கம்’ ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா, இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் கவனிக்க, கலை இயக்கத்தைத் துரைராஜ் கையாள, நிர்வாக தயாரிப்பு பணியை எஸ். பழனியப்பன் மேற்கொண்டார். க்ரைம் த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தைப் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில், அவரின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும், மயக்கும் பின்னணி இசையும் படத்தின் தரத்திற்குக் கட்டியம் கூறும்வண்ணம் அமைந்துள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.