32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

புத்தம்புது பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ்

Dinesh R சேலம் Published: 20/04/2022 3 நிமிட வாசிப்பு Updated: 16/07/2022 சினிமா
எழுத்து அளவு:

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளைத் தந்த தமிழ்த் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்திட்ட இந்தத் தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடகத் துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் திரு.சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர். லாக்டவுன் காரணமாக 2.5 வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளியை மீண்டும் திறக்க உற்சாகமாக இருக்கிறார். கதை மனதைக் கவரும் நட்புகள், டீனேஜ் காதல்கள் மற்றும் பழைய பள்ளி மாணவர்களுக்கும் புதிதாகச் சேரும் கூட்டத்திற்கும் இடையே உருவாகும் போட்டிகளைச் சுற்றி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூடுவதற்கான அரசாங்க அறிவிப்பைப் பெறும்போது சக்திவேல் மிகப்பெரிய சவாலை எதிர் கொள்கிறார். பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பள்ளியை மூடுவதில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த வெப் சீரீஸீன் கதை.

தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடிக்க, நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடிக்கிறார்.

இத்தொடரில் நடித்து பிரபலமான முந்தைய தொடரின் நடிகர்கள், புதிய தொடர் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

‘பிக்பாஸ்’ புகழ் நடிகர் ராஜு கூறியதாவது, “என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள ஒரு தளமாக இருந்தது ‘கனா காணும் காலங்கள்’ தொடர் தான். நான் காலேஜ் போய் படித்ததை விட இந்தத் தொடரில் நடித்த ஞாபகங்கள் தான் அதிகம் இருக்கிறது. அது ஒரு லைஃப் ஸ்டைல். கனா காணும் பலருக்கு என்னை மாதிரி நிறைய பேருக்கு ஒரு தளமாக இருந்துள்ளது. கனா காணுங்கள் இதோ புதிய தொடர் வருகிறது” என்றார்

நடிகர் பாலசரவணன், “கனா காணும் காலங்கள், இந்தப் பெயரைக் கேட்டவுடன் உள்ளூர ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. எனக்கு பல கனவை நனவாக்கித் தந்தது இந்தத் தொடர் தான். நான் நடிகனாக இருக்க காரணம் இந்தத் தொடர் தான். எங்களுக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ அதே போல் இந்தப் புதிய தொடருக்கும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகர் ரியோ ராஜ், “கனா காணும் காலங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத உணர்வு. அது மீண்டும் வரப்போகிறது. நிறைய புதிய திறமைகளுடன் புதிய ஞாபகங்களுடன், சிரிப்பு சந்தோஷம் தர வரப்போகிறது” என்றார்.

நடிகர் விஷ்ணு, “எனக்கு நடிகராக ஆசை. ஆனால் சொல்லிக்கொள்ள தயக்கம். அதை உடைத்து அந்தக் கனவை நனவாக்கி தந்தது கனா காணும் காலங்கள் தான். இப்போது மீண்டும் கனா காணும் காலங்கள் வரப்போகிறது. நான் எப்படி ஜெயித்திருக்கிறேனோ அதே போல் புது திறமையாளர்கள் வரப்போகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

வரும் ஏப்ரல் 22 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்தியேகமாக “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் கண்டுகளியுங்கள்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.