Shadow

கன்னட இயக்குநரின் தமிழ்ப்படம்

Ketkamale ketkum movie

சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசு இருக்கும். பேய்க்கதைகள் என்பது ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும். இதுதான் பேய்க்கதைகளின் ஒன் லைன்.

கேட்காமலே கேட்கும் எனும் திரைப்படம் – டெக்னாலஜி பேய்படம். செல்ஃபோனிலிருந்து பேய் ஊடுருவி இன்னொரு செல்ஃபோனுக்குச் செல்கிறது. ஹாரர் மூவியின் அடையாளத்தையும் கொஞ்சம் மாறுபட்டு யோசித்திருக்கிறார். செல்ஃபோனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகில் கொல்லும் அளவுக்கு மிரட்டப்பட்டிருக்கிறது. கதைக்கேற்ப டெக்னாலஜிகள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சென்னை, மன்னார், கொடைக்கானல், கர்நாடக மடக்கேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் கர்நாடகாவில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. தமிழில் படம் இயக்க வேண்டும் என்பது அவரது நெடுநாளைய ஆசை. அவரது அம்மாவின் பூர்வீகம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமுகங்கள் கிரண், திவ்யா, வந்தனா, பிரக்னா N.பாபு, மஞ்சுநாத், மது, ஜெயராஜ், பைரக கவுண்டர், நாகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

>> ஒளிப்பதிவு – சந்தோஷ்
>> இசை – கிரிதர்திவான்
>> எடிட்டிங் – K.கிரிஷ் குமார்
>> பாடல் – பாரதிவள்ளி
>> இணை தயாரிப்பு – S.குரு ராஜ்,  G.சசிகாந்த், G.கிருஷ்ணமூர்த்தி
>> தயாரிப்பு – C.வெங்கடேஷ்
>> தயாரிப்பு நிறுவனம் – சிவி பிலிம்ஸ்
>> கதை திரைக்கதை வசனம் இயக்கம் – K.நரேந்திர பாபு