Shadow

Tag: Rajkumar

காசு மேலே காசு விமர்சனம்

காசு மேலே காசு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிகச் சுலபமாய்க் கோடீஸ்வரராகப் பார்க்கிறார் மயில்சாமி. அதற்காக தன் மகனை, ஒரு பணக்கார பெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் காதலிக்க ஊக்குவிக்கிறார். ஆனால் நாயகியோ, ஒரு பிச்சைக்காரரின் மகள். பணக்கார வீட்டில் வேலை செய்பவரைப் பணக்காரி என நினைத்துக் கொள்கிறான் நாயகன். அந்தக் காதல் என்னானது என்பதும், மயில்சாமியின் பேராசை என்னானது என்பதுமே படத்தின் கதை. குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் மிக ஜாலியான படம். மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள நம்புறாங்க, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி முதல் முறையாக இயக்கியுள்ள படமிது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு அன்றி கதாநாயகியின் தந்தையாகவும் நடித்துள்ளார் பழனி. படத்தின் பலம் அதன் கலகலப்பான வசனங்கள். உதாரணத்திற்கு, மயில்சாமியின் மனைவி, “ஏன் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டிருக்கீங்க?” எனக் கேட்பார். அதற்கு, “நீ குட்டி போட்ட ப...
இலவச ஊட்டச்சத்து மருந்துகள் – திவ்யா சத்யராஜ் அதிரடி

இலவச ஊட்டச்சத்து மருந்துகள் – திவ்யா சத்யராஜ் அதிரடி

சமூகம்
இலவச மருத்துவம், இலவச கல்வி இதை தரும் அரசுதான் நல்ல அரசு. சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்துத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச விட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார். இது பற்றி திவ்யா சத்யராஜ், "சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்துத் தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் பெருங்கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும், ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தேன். மக்களின் தேவை என்ன...
விழித்திரு விமர்சனம்

விழித்திரு விமர்சனம்

இசை விமர்சனம், சினிமா
'ஓர் இரவில் நான்கு கதைகள்' என்பதுதான் படத்தின் உபத்தலைப்பே! திருநெல்வேலிக்கு ஊர் திரும்ப வேண்டிய ஒருவனின் பர்ஸ் சென்னையில் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது. அன்றிரவு அவனுக்கு என்னென்னவெல்லாம் நிகழ்கிறது என்பதுதான் படத்தின் கதை. விதார்த், வெங்கட் பிரபு, ராகுல் பாஸ்கரன் எனப் படத்தில் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் இருந்தாலும், கிருஷ்ணா தான் படத்தின் நாயகன். பர்ஸைக் கிருஷ்ணா தொலைப்பதில் இருந்தே கதை தொடங்குகிறது. அவரது படபடவென்ற மேனரிசத்துக்கு ஏற்ற பாத்திரம். திருடன் சந்திர பாபுவாக விதார்த். திருடி சரோஜா தேவியாக சாய் தன்ஷிகா. இருவரது அறிமுகமும், ஒருவரை ஒருவர் ஏய்க்கப் பார்க்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. வெடுக் வெடுக்கெனப் பேசும் கதாபாத்திரத்தில் சாய் தன்ஷிகா அசத்தியுள்ளார். ஆனால், இத்தகைய சீரியசான படத்துக்கு தம்பி ராமையாவின் அசட்டு நகைச்சுவையும், விஜய டி.ராஜேந்தரின். குத்துப் பாட்டும் அவச...
கன்னட இயக்குநரின் தமிழ்ப்படம்

கன்னட இயக்குநரின் தமிழ்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசு இருக்கும். பேய்க்கதைகள் என்பது ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும். இதுதான் பேய்க்கதைகளின் ஒன் லைன். கேட்காமலே கேட்கும் எனும் திரைப்படம் - டெக்னாலஜி பேய்படம். செல்ஃபோனிலிருந்து பேய் ஊடுருவி இன்னொரு செல்ஃபோனுக்குச் செல்கிறது. ஹாரர் மூவியின் அடையாளத்தையும் கொஞ்சம் மாறுபட்டு யோசித்திருக்கிறார். செல்ஃபோனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகில் கொல்லும் அளவுக்கு மிரட்டப்பட்டிருக்கிறது. கதைக்கேற்ப டெக்னாலஜிகள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னை, மன்னார், கொடைக்கானல், கர்நாடக மடக்கேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் கர்நாடகாவில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. தமிழில் படம் இயக்க வேண்டும் என்பது அவரது நெடுநாளைய ஆசை. அவ...
பள்ளியும் காதலும் சாதியும்

பள்ளியும் காதலும் சாதியும்

சினிமா, திரைச் செய்தி
வி.கே.பி.டி.கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிப்பில், வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். ‘கற்றது தமிழ்’ படத்தில் அஞ்சலியின் சிறு வயது கேரக்டரிலும், ‘காதல் கசக்குதய்யா’ நாயகி வெண்பா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமைய்யா, பொன்வண்ணன், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், பருத்தி வீரன் சுஜாதா ஆகியோரும் நடித்துள்ளனர். நடிகர் நாசர் பேசும்போது, “இன்றையச் சமூகச் சூழலில் இன்னும் சாதீயத்தின் பிரம்பால் அடி வாங்கும் காதல் கதைதான் இந்தp பள்ளிப் பருவத்திலே திரைப்படம். இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வரவேண்டும்” என்றார். படத்தின் கதாநாயகி வெண்பா பேசும்போது, “நான் தமிழ்ப் பெண் என்பதோடு நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொல்லி மேடையில் பலரும் பாராட்டினார்கள். இதைக் கேட்கும...
திரைக்கு வராத கதை விமர்சனம்

திரைக்கு வராத கதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் இல்லாப் படங்கள் கூட அரிதினும் அரிதாய் வரும். முழுக்க முழுக்க பெண் நடிகர்கள் மட்டுமே நடித்துள்ள படமிது. திரையில் எந்தவொரு ஆணின் நிழலும் தப்பித் தவறியும் வந்துவிடக் கூடாதென மிகக் கவனமாக இருந்துள்ளார் மலையாள இயக்குநரான துளசிதாஸ். இதுவரை திரையில் வந்தேயிராத கதையினுடைய குறும்படம் ஒன்றினை எடுக்க நினைக்கும் திரைப்படக் கல்லூரி மாணவியான இனியாவிற்குள் ஓர் ஆவி புகுந்து கொள்கிறது. யாரந்த ஆவி என்பதும், அதன் மரணப்பசிக்குக் காரணம் ஏன் என்பதும், அதன் பசி அடங்கியதா என்பதும் தான் படத்தின் கதை. நகைச்சுவை என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளால் படத்தின் முதல் பாதி ரொம்பவே கடுப்பேற்றுகிறது. பாய் ஃப்ரெண்டுடன் உரையாடுவது போல் நாயுடன் பேசுகிறார் கோவை சரளா; 'என் பட்டக்சில் உதைச்சது யார்?' எனக் கேட்கிறார் ஆர்த்தி; 'எனக்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸ்' என காதுக்கு ஒரு ஃபோனெனச் சல்லாபிக்கிறார் கோவை சரளா; பீர் கு...