(Image Courtesy: news.indiatimes.com)
முதல் பகுதி: “அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன்
எத்தனை வகையான பாரதங்கள்?
ஜைமினி பாரதம்
கன்னட பாரத கதாமஞ்சரி
பீல் மஹாபாரதம்
இந்தோனேஷிய மஹாபாரதம்
ஜைன பாரதம்
வில்லிபாரதம்
என இன்னும் பலவகையில் பரவி இருக்கின்றன. இவை அந்தந்தப் பிராந்திய சூழலுக்கேற்றாற்போல எழுதியவர்களால் கற்பனைக்குட்படுத்தப் பட்டு எழுதப் பட்டிருக்கின்றன.
இப்படியானவற்றில் கர்ணனை அதிசூரனாக, வள்ளலாக எல்லாம் காட்டிய பெருமை தென்னிந்திய வகை பாரதங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
பிறந்தான் கர்ணன்! – ஆதிபர்வம் பகுதி 111
பிருதையின் மகளான குந்தி தேவி, துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்த சமயத்தில், அவர் பணிவிடையில் மகிழ்ந்து ஒரு வரம் தருகிறார். அந்த வரத்தின் படி அவள் எந்த தேவதையை நினைத்து துருவாசர் சொன்ன மந்திரத்தைச் சொல்கிறாளோ, அந்த தேவதையின் அம்சமாக ஒரு மகவு உண்டாகும்.
அவளும் விளையாட்டாக சூரியனைப் பார்த்து அந்த மந்திரத்தைச் சொல்லிவைக்க, கவச குண்டலத்துடன் கர்ணன் உருவாகிறான். சூரியனால் இழந்த கன்னித்தன்மையை சூரியன் மீண்டும் அளித்து மறைகிறான்.
உற்றார், சுற்றத்தாரின் பழிக்கு அஞ்சி, கர்ணனை அவள் ஆற்றில் அனுப்பி வைக்க அவன் அதிரதன், இராதை என்ற தம்பதிகளுக்குக் கிடைக்கிறான். அதிரதன் சூதப் பரம்பரையில் பிறந்தவன். அவன் பெரும்பாலும் மக்களுக்குத் தெரிந்தவனாகவே இருக்கிறான். கர்ணன், சூரியனை வழிபடும் நேரத்தில் யார் எது கேட்டாலும் இல்லை என்று கொடுத்துவிடும் குணம் உடையவனாக இருந்தான். கர்ணனிடம் இந்திரன் பிராமனன் வடிவில் வந்து கர்ணன் சூரியனை வழிபடும் நேரத்தில் அவனுடைய கவச குண்டலங்களைக் கேட்டுப் பெறுகிறான். அது முன்பு வரைக்கும் கர்ணன் மஹாபாரதத்தில், இராதேயன், வசுசேனன் போன்ற பெயர்களால் அறியப் பட்டான்
கர்ணன் கொடுத்த கவச குண்டலத்திற்கு மாற்றாக இந்திரன் சக்தி ஆயுதத்தை அளிக்கிறான். இந்தக் கணையை எதிர்ப்பவன் யாராக இருந்தாலும் அவன் அழிக்கப் படுவான். இந்தக் கணை ஒரு முறை மட்டுமே உபயோகம் ஆகும் என்று கொடுக்கிறான். இதற்கு அப்புறம் தான் பாண்டவர்கள் பிறப்பு மகாபாரத்தில் சொல்லப்படுகிறது.
கர்ணன் என்றால் அறுப்பவன் என்ற அர்த்தம் வருகிறது.
கர்ணனுக்கும், தருமனுக்கும் கிட்டத்தட்ட 16 வருஷங்கள் வித்தியாசம். அப்படியென்றால் கர்ணனுக்கும் அருச்சுனனுக்கும் 18 வயதாவது வித்தியாசம் இருக்க வேண்டும். கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் 17 வருஷங்களாவது இருக்கவேண்டும். ஆகவே ஆரம்பத்தில் இருந்தே கர்ணன், துரியோதனனுக்கு பெரியண்ணன் மாதிரியாகத்தான் இருந்திருக்கிறான். மஹாபாரத தொடர்களில், படத்தில் காட்டப்படுவது போல கர்ணன் அருச்சுனனுக்கோ அல்லது துரியோதனனுக்கோ சமமான அல்லது கொஞ்சமே கொஞ்சம் பெரியவன் எல்லாம் இல்லை. மிகப் பெரியவன்.
கர்ணனின் பிறப்பு – கர்ணனின் இறப்பு
கர்ணனின் வயது குறித்த விவரம் மேலுள்ள சுட்டிகளில் காணலாம்.
ஆக, துரியோதனனும் கர்ணனும் ஏதோ ஒத்த வயதினர்கள், ஆகவே துரியோதனன் கர்ணன் இருவரும் தீச்செயல்களை அறியாமல் செய்தார்கள் என்பதெல்லாம் ஏற்கவே முடியாது. கர்ணன் துரியோதனனுக்கு சிறு வயதில் இருந்தே நண்பன். துரியோதனனின் பல பாவச் செயலுக்கு பல சமயம் தூண்டி விட்டவன் கர்ணனே என்பதும் மகாபாரதம் சொல்லும் உண்மை.
//”Some time after, Duryodhana again mixed in the food of Bhima a poison that was fresh, virulent, and very deadly. But Yuyutsu (Dhritarashtra’s son by a Vaisya wife), moved by his friendship for the Pandavas, informed them of this. Vrikodara, however, swallowed it without any hesitation, and digested it completely. And, though virulent the poison produced no effects on Bhima.
“When that terrible poison intended for the destruction of Bhima failed of its effect, Duryodhana. Karna and Sakuni, without giving up their wicked design had recourse to numerous other contrivances for accomplishing the death of the Pandavas. And though every one of these contrivances was fully known to the Pandavas, yet in accordance with the advice of Vidura they suppressed their indignation.//
கர்ணன் இங்கே சகுனியுடனும் துரியோதனனுடனும் ஆரம்பத்திலேயே இருந்திருக்கிறான். சகுனி துரியோதனன் செய்த பாவங்களுடன் உடந்தையாகவே இருக்கிறான்.
இது குறித்த ஹரியண்ணாவின் கட்டுரை ஆதாரங்களுடன் நமக்கு உண்மையைக் காட்டும்.
தொடரும்..
– ஐயப்பன் கிருஷ்ணன்
(அடுத்த பகுதி: கர்ணனின் வீரம்)