Shadow

28 நாட்களில் முடிந்த கழுகு – 2

Kazhagu-2-shooting-wrap

கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் கிருஷ்ணா நடிக்கும் கழுகு – 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. 30 நாட்களில் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடிப்பதாக உறுதி கூறிய இயக்குநர் சத்யசிவா, 28 நாட்களில் மொத்த வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் இன்று முடித்துக் கொடுத்துள்ளார். 4 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் வியாபாரம் 7 கோடியைத் தாண்டும் என சினிமா வட்டாரத்தினாரால நம்பப்படுகிறது.

பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் துவங்க இருக்கிறது. படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடத் தயாரிப்பாளர் சிங்காரவேலன் முடிவெடுத்துள்ளார். முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நூறு நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்புப் பணிகளையும் முடித்து படத்தை வெளியிடவுள்ளது, தற்போதைய தமிழ் சினிமா சூழலில் மிகப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.