Shadow

Tag: இயக்குநர் சத்யசிவா

ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம். திருப்பெரும்புதூரில், 1991 மே 21ஆம் தேதி அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இலங்கை அகதிகளாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் ஆண்கள், பெண்கள் என பல இலங்கைத் தமிழர்களை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் செல்கிறது காவல்துறை. ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி விடுவோம் என சொல்லி அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கிறது காவல்துறை. குடும்பத்தினரும் அவர்களை விடுதலை செய்யக் கோரி மனு கொடுத்தும், போராட்டம் செய்தும் எதுவும் எடுபடவில்லை. அப்படியே 4 ஆண்டுகள் கழிய, வேலூர் கோட்டையில் இருந்து 43 பேர் தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டுகிறார்கள். அத்திட்டம் அவர்களுக்குச்...
நான் மிருகமாய் மாற விமர்சனம்

நான் மிருகமாய் மாற விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர் தேவராஜனைக் கூலிப்படையினரிடம் இருந்து காப்பாற்றுகின்றான் பூமிநாதனின் தம்பி. தேவராஜனைக் கொல்ல முடியாத ஆத்திரத்தில், பூமிநாதனின் தம்பியைக் கொன்றுவிடுகின்றனர் கூலிப்படையினர். சட்டத்தை நம்பாமல், தன் கைகளாலேயே கூலிப்படையினரைக் கொன்று விடுகிறார் பூமிநாதன். பூமிநாதனின் குடும்பத்தைக் கொன்று விடுவதாக அச்சுறுத்துகிறான் தாஸ் எனும் கூலிப்படைத் தலைவன். பூமிநாதனின் குடும்பம் பிழைக்க வேண்டுமென்றால், தேவராஜனைக் கொலை செய்யும்படி பூமிநாதனை நெருக்குகிறான் தாஸ். தன் குடும்பத்திற்காக மிருகமாய் மாறும் பூமிநாதன் எப்படி தாஸிடமிருந்து காப்பாற்றுகின்றான் என்பதுதான் படத்தின் கதை. கொலைகளும், ரத்தத் தெறிப்புகளுமாக உள்ளது படம். கதையிலுள்ள வன்முறையை விட, காட்சிகளாக விரியும்போது வன்முறை தாண்டமாடியுள்ளது. வன்முறையையும், ரத்தத்தெறிப்புகளையும் நம்பியே இயக்குநர் சத்யசிவா படம் எடுத்துள்ளது போல் தெரிகிறது. முதற்பாதி...
28 நாட்களில் முடிந்த கழுகு – 2

28 நாட்களில் முடிந்த கழுகு – 2

சினிமா, திரைத் துளி
கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் கிருஷ்ணா நடிக்கும் கழுகு - 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. 30 நாட்களில் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடிப்பதாக உறுதி கூறிய இயக்குநர் சத்யசிவா, 28 நாட்களில் மொத்த வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் இன்று முடித்துக் கொடுத்துள்ளார். 4 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் வியாபாரம் 7 கோடியைத் தாண்டும் என சினிமா வட்டாரத்தினாரால நம்பப்படுகிறது. பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் துவங்க இருக்கிறது. படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடத் தயாரிப்பாளர் சிங்காரவேலன் முடிவெடுத்துள்ளார். முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நூறு நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்புப் பணிகளையும் முடித்து படத்தை வெளியிடவுள்ளது, தற்போதைய தமிழ் சினிமா சூழலில் மிகப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது....