32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

விஜய் தேவரகொண்டா – சமந்தா நடனத்துடன் ‘குஷி’ இசை நிகழ்ச்சி

Inbaaraja சேலம் Published: 17/08/2023 6 நிமிட வாசிப்பு Updated: 22/08/2023 சினிமா
எழுத்து அளவு:

விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் குஷி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இணைந்து தயாரிக்க, சிவ நிர்வானா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

” யூட்யூப்  மற்றும்  மியூசிக்  ஆப்பில்  இருபது  கோடிக்கும்  அதிகமானோர் ‘குஷி’ பாடல்களை  கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின்  இசை நிகழ்ச்சி ஹைதராபாத் நகரில் மிகவும் பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி போன்ற பாடகர்களும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு குஷி படத்தில் இடம் பெற்ற அற்புதமான பாடல்களைப் பாடி ரசிகர்களையும் இசை ஆர்வலர்களையும் சந்தோச பரவசத்தில் ஆழ்த்தினார்கள்.

‘குஷி’  படத்தின்  டைட்டில்  பாடலுக்கு  விஜய்  தேவரகொண்டாவும்- சமந்தாவும் கைகோர்த்து  ஒன்றாக  நடித்து,  நடனமாடி  காண்பித்த போது பார்வையாளர்களின் கரவொலி  விண்ணை எட்டியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி. முரளி பேசியதாவது…

மைத்ரி மூவி  மேக்கர்ஸ்  நிறுவனத்திற்கு  நன்றி.  ரவி  மற்றும்  நவீன் போன்ற நல்ல தயாரிப்பாளர்களை முதன் முறையாக பார்க்கிறேன்.  நான் வேறு வகையான  திரைப்படங்களுக்கு  ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தேன். இயக்குநர் சிவ நிர்வானா எனக்கு காதல் கதையில் பணிபுரியும் வாய்ப்பை அளித்தார்.   படம்  பார்த்த  பிறகு  ஆராத்யா – விப்லவ் கதாபாத்திரங்களை யாரும்  மறக்க  முடியாது.  செப்டம்பர்  ஒன்றாம்  தேதி  இந்தப்  படத்தை அனைவரும்  ரசிப்பார்கள்.‌

 

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது…

 

‘ இந்தப்  படத்திற்கு அழகான இசையை வழங்க.. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின்  படத்  தயாரிப்பாளர்கள்  அளித்த  ஆதரவை  என்னால்  மறக்க இயலாது.  இந்த  படத்தின்  இசைக்காக  15  நாட்கள்  எடுத்துக் கொண்டோம். குஷியில்  காதல்  உணர்வுடன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைக்க எனக்கு உத்வேகம் அளித்தவர் என் அன்பு மனைவி ஆயிஷா.  என்று பேசினார்.

 

தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பேசியதாவது..

 

”விஜய் தேவரகொண்டா  எங்கள்  தயாரிப்பில்  ‘டியர்  காம்ரேட்’  படத்தில் நடித்தார்.  அந்தப் படம் நாங்கள் எதிர்பார்த்த  வெற்றியை  பெறவில்லை. ஆனால்  குஷி  படத்தின்  மீது மிகுந்த நம்பிக்கையுடன்  இருக்கிறேன்.  இந்தப் படம்  பெரிய  வெற்றி படமாக அமையும்.  எங்கள் தயாரிப்பில் சமந்தா நடித்த அனைத்து படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியிருக்கிறது. ‘ஜனதா கரேஜ்’, ‘ரங்கஸ்தலம்’, ‘புஷ்பா ‘ போன்ற படங்கள்  எவ்வளவு  பெரிய வெற்றியை பெற்றன என்பதனை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.  குஷியும்  வெற்றி பெறும்  என்பதற்கு  இதுவே உதாரணம்.  இவ்வளவு  நல்ல  படத்தை  எங்களுக்கு  தந்த  இயக்குநர்  சிவ நிர்வானாவிற்கு நன்றி. குஷி பட குழுவினர் அனைவருக்கும்  நன்றி.  என்று பேசினார்.

 

இயக்குநர் சிவ நிர்வானா பேசியதாவது…

 

” திருமணமான  தம்பதிகள்… திருமணம் ஆகாதவர்கள்… வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள விரும்பாதவர்கள்… என அனைவரும்  ‘குஷி’ படத்தை பார்த்து  தங்கள் காதல் வாழ்க்கையின் நினைவுகளை பகிர்ந்து கொள்வார்கள்.  படத்தை விரும்பி. பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி கட்டிப் பிடித்துக்  கொள்வார்கள். படம்  முழுக்க விஜய் தேவரகொண்டா- சமந்தாவுக்கு பதிலாக, விப்லவ் -ஆராத்யாவை காண்பீர்கள்.  இது புது கதை என்று சொல்ல மாட்டேன்.  திருப்பங்கள் இருக்கும்.  ஆனால் அது உங்கள் இதயத்தை தொடும்.  குஷி சிரிக்கவும் வைக்கும். அழவும் வைக்கும். திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் மீண்டும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.  படத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு நல்ல குடும்பம் இருப்பது போல் உணர்வீர்கள். அர்ஜுன் ரெட்டி படத்தை  பார்த்துவிட்டு விஜயின்  தீவிர ரசிகனாகி  விட்டேன். விஜய் தேவரகொண்டா  மீதான அத்தனை அன்பையும்  இந்த படத்தில் வெளிப்படுத்தி  இருக்கிறேன்.  நான் யாருடைய ரசிகன் என்று சொல்லவில்லை.  ஆனால் நான் சமந்தாவின் ரசிகன் என்று எந்நாளும் சொல்லிக் கொள்வேன்.  இரண்டரை மணி நேரம் குஷியை பார்க்க வாருங்கள்.  உங்களுக்கு  எமோஷனல்  மற்றும்  பொழுதுபோக்கு உத்தரவாதம்.

நாயகி சமந்தா பேசியதாவது…

 

‘ படப்பிடிப்பு தருணத்திலேயே  இப்படத்தின்  பாடல்களைக்  கேட்டு ‘குஷி’ ஆல்பம் மீது காதல் கொண்டேன்.  பாடல்களை  இங்கே  நேரலையில் கேட்கும் போது  செப்டம்பர் 1ஆம் தேதி உங்கள் அனைவரோடும் சேர்ந்து படத்தை பார்க்க  வேண்டும் என்ற எண்ணம்  ஏற்படுகிறது. . மைத்ரி  மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள்  எனக்கு பிடித்த தயாரிப்பாளர்கள்.  கடந்த  ஒரு வருடமாக அவர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவை என்னால்  மறக்க  இயலாது.  என் திரையுலக  பயணத்தில் மறக்க முடியாத படம் ‘குஷி’.  இதில்  நடிக்க  வாய்ப்பு கொடுத்த  இயக்குநர்  சிவ நிர்வானாவிற்கு  நன்றி. இசையமைப்பாளர் ஹேஷாமை  தெலுங்கு  பார்வையாளர்கள்  தங்களது  சொந்தக்காரர்களைப் போல்  காண விரும்புகிறார்கள். ‘குஷி’ திரைப்படத்தில் மூத்த கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களின்  பங்களிப்பு  திரைப்படத்தை வலிமையாக்கி இருக்கிறது. நீங்கள் என் மீது காட்டும் அன்பினால் நான் ஆரோக்கியத்துடன் மீண்டு வருவேன். ‘குஷி’ பிளாக்பஸ்டர் ஹிட் என்பது உறுதி.‌ என்று உருக்கத்துடன் பேசினார்.

 

நாயகன் விஜய் தேவரகொண்டா பேசியதாவது….

” இங்கு குஷி இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் மற்றும்  தொலைக்காட்சி  மற்றும்  யூடியூப்  இணையதளத்தில்  பார்வையிடும் பார்வையாளர்கள்  அனைவருக்கும்  எனது  நன்றி.  செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று  உங்களுக்கு ‘குஷி’யாக  இருக்க  வாழ்த்துக்கள்.  நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும்  நீங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என எந்த மொழியில் பேசினாலும்.. உங்களுக்கு  மகிழ்ச்சியை பரப்ப நாங்கள் வருவோம்.   . சிவாவுக்கு என் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது. செப்டம்பர்  ஒன்றாம் தேதி  அன்று திரையரங்குகளில்  படத்தை பார்க்கும் உங்கள் அனைவருக்கும் இந்தப் படத்தை சிவா எந்த அளவிற்கு ரசித்தார் என்பதை அறிவீர்கள். இந்தப் படத்தின் வெற்றியை என் முகத்தில் பார்க்காமல்.. சமந்தாவின்  முகத்தில்  பார்க்க  வேண்டும்  என்று விரும்புகிறேன்

 

இந்தப்  படத்திற்காக  அவர்  எவ்வளவு  கஷ்டப்பட்டார்  என்பதை  சொல்ல முடியாது.  ஏப்ரல்  மாதம்  படத்தை  மிகவும்  மகிழ்ச்சியுடன்  தொடங்கினோம். முக்கிய  பகுதியில்  படப்பிடிப்பு  நிறைவடைந்தது.  ஜூலையில்  30  முதல்  35 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த போது, ‘தனக்கு உடல்நிலை சரியில்லை’ என்று  சமந்தா  கூறினார்.  ‘நீ  மிகவும்  அழகாக  இருக்கிறாய்’  என நானும், சிவாவும்  சமந்தாவிடம்  கூறுவது  வழக்கம்.  முதலில்  மூன்று  நாள்  நீடிக்கும் என நினைத்தேன். பிறகு  இரண்டு  வாரங்களாகும்  என்று  நினைத்தோம். ஆனால்  உடல்  நிலையில்  முன்னேற்றம்  ஏற்படவில்லை.  மற்றொரு திரைப்படத்தின்  விளம்பர நிகழ்வில்  நான் கலந்து கொண்டிருந்த  போது தான் அவரது உடல்நிலை  குறித்து அறிந்தேன். சமந்தா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்… எங்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.  அவர்  மிகவும்  போராடினார். ஆனால்  ஒரு  சந்தர்ப்பத்தில் சமந்தா தனது  உடல்நிலை  குறித்து  பேச  முன்வந்தார். ஏனெனில் கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு பலர் இதே போன்ற உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நானும் உங்களை போலவே போராடுகிறேன் என்று அவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் தனது உடல்நிலை குறித்து வெளிப்படுத்தினார் சமந்தா. அவருக்கு இன்னும் உடல்நிலை சரியில்லை. ஆனால் அவர் இன்று எங்களுக்காக இங்கு வந்து என்னுடன் நடனமாடினார். செப்டம்பர் ஒன்றாம் தேதி சமந்தா முகத்தில் சிரிப்பை காண வேண்டும். மேலும் எங்கள் இயக்குநர் சிவாவிற்கு ஒரு ஹிட் கொடுக்க விரும்புகிறோம்.

 

எங்கள் ஒளிப்பதிவாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் சூப்பர் ஹிட் இசையை கொடுத்திருக்கிறார். ஆறு  வருடங்களாக  இத்துறையில்  இருக்கிறேன்.  நீங்கள்  அனைவரும் என்னை  மிகவும்  நேசிக்கிறீர்கள்.  என்னுடைய  வெற்றி  தோல்வியில்  என்னை சுற்றி எத்தனை  பேர்  மாறினாலும்.. நீங்கள்  மாறவில்லை.  நீங்கள் எப்போதும்  என்னிடம்  அன்பை காட்டி, என்னுடன் இருக்கிறீர்கள்.  செப்டம்பர் ஒன்றாம்  தேதி  உங்கள் அனைவரின் முகத்திலும்  புன்னகையை  காண விரும்புகிறேன். என்று பேசினார்.

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.