விஜய் தேவரகொண்டா – சமந்தா நடனத்துடன் ‘குஷி’ இசை நிகழ்ச்சி
விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் குஷி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இணைந்து தயாரிக்க, சிவ நிர்வானா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.'' யூட்யூப் மற்றும் மியூசிக் ஆப்பில் இருபது கோடிக்கும் அதிகமானோர் 'குஷி' பாடல்களை கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத் நகரில் மிகவும் பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி போன்ற பாடகர்களும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு குஷி படத்தில் இடம் பெற்ற அற்புதமான ...