32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

லக்ஷ்மி – தி டான்ஸர் தித்யா

Dinesh R சேலம் Published: 19/08/2018 3 நிமிட வாசிப்பு Updated: 22/08/2018 சினிமா
எழுத்து அளவு:

Lakshmi-movie-Ditya

ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் நடனத் திரைப்படம் ‘லக்‌ஷ்மி’. நடனப்புயல் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’ ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்குச் சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“லக்‌ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து விட்டு இந்தத் திரைப்படத்தில் நடித்திருப்பது சிறப்பான அனுபவம். ஐஸ்வர்யா தான் என்னை அழைத்து, ‘நீ இந்தப் படம் பண்ணனும்’ என்று சொன்னார். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த குழந்தைகள் மிகப்பெரிய ஆளாக வருவார்கள்” என்றார் நடிகை ஷோஃபியா.

இசையமைப்பாளர் சாம் C.S.”இதுவரை நிறைய ஹாரர், த்ரில்லர், மாஸ் திரைப்படங்களுக்கு தான் இசையமைத்திருக்கிறேன். முதன் முறையாக ஒரு டான்ஸ் படத்துக்கு இசையமைத்தது, அதுவும் நடனப்புயல் பிரபுதேவா அவர்கள் நடனமாடும் படத்துக்கு இசையமைத்தது மகிழ்ச்சியான விஷயம்.

சின்ன வயதில் பிரபுதேவா சார் படங்களை ரசித்துப் பார்த்து விட்டு, அவர் படத்துக்கு இசையமைப்பது ஒரு சிறந்த உணர்வு. கரு படம் முடிந்தவுடன், மீண்டும் இந்தப் படத்துக்கு என்னை இசையமைக்கச் சொன்னார். இந்தப் படத்துக்குள் நடனம் தாண்டி பலவிதமான எமோஷன் இருக்கிறது. எமோஷனல் ம்யூசிக்கல் டான்ஸ் படமாக வந்திருக்கிறது. இந்தக் குழந்தைகள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் படம் இருக்கும் என்றார்.

“நாசர் சார் மகன் பாஷா என்னிடம், ‘விஜய் சார் ஒரு படம் பண்ணப் போறார், ஒரு 10 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். கதை பிடிச்சிருந்தால் நடி” என்று சொன்னார். விஜய் சார் கதை சொன்னபோது உடனடியாக ஓகே சொல்லி விட்டேன். திருமணத்திற்கு முன்பே காக்கா முட்டை, ஆறாது சினம், லக்ஷ்மி படங்களில் குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து விட்டேன். அவர்கள் ரொம்பவே ஸ்பெஷல். ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் இருந்து நான் வந்திருந்தாலும், இந்தப் படத்தில் எனக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரபுதேவா சாருடன் இந்தப் படத்தில் நடித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அனுபவம்” என்றார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

“படத்தைப் பார்த்த ரவீந்திரன் சார் வாங்கி விட்டார், அதுவே படம் நல்லா இருக்கு என்பதைச் சொல்கிறது. இந்திய அளவில் இருக்கும் நல்ல திறமையான குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் விஜய். தேவி, லக்‌ஷ்மி படங்களில் விஜய் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து தேவி 2 படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். குழந்தைகள் மக்ச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் 4,5 டேக் வாங்கினாலும் குழந்தைகள் குறிப்பாக தித்யா முழு டான்ஸையும் ஆடி முடித்து தான் நிறுத்துவார்” என்று தித்யாவைப் புகழ்ந்தார் பிரபுதேவா.

“பிரபுதேவாவை வைத்து டான்ஸ் படம் பண்ணா எப்படி இருக்கும் என்ற ஐடியாவை எனக்குக் கொடுத்தது நீரவ் ஷா தான். பிரபுதேவா சார், ‘டான்ஸ் படம் பண்ணா வேற லெவல்ல இருக்கணும்’ என்றார். இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் அதிக அக்கறை எடுத்து உழைத்துக் கொடுத்தார். அவர் எங்கள் டீமுக்கு மிகப்பெரிய பில்லர். படத்துக்கு எது தேவை என்றாலும் பிரபுதேவா சாரிடம் தான் போய் நிற்பேன்.

இந்திய முழுக்க நிறைய பேரை ஆடிஷன் செய்து இந்தப் படத்தில் நடிக்க நடிக்க வைத்திருக்கிறோம். பேபி தித்யா இந்தப் படத்திற்கு பிறகு மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடிப்பார்” என்றார் இயக்குநர் விஜய்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.