32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா?

Dinesh R சேலம் Published: 24/04/2024 1 நிமிட வாசிப்பு இது புதிது
எழுத்து அளவு:

ராஜ் பீகாக் மூவீஸ் சார்பில் எம். கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு’ ஆகும். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரும், கதாநாயகியாக நந்தனா ஆனந்தும் நடிக்கின்றனர். தீபா சங்கர், பழ. கருப்பையா, ‘பசங்க’ சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சத்திய தேவ் உதயசங்கரும், ஒளிப்பதிவாளராகப் பிச்சுமணியும், படத்தொகுப்பாளராக கி. சங்கரும் தொழில்நுட்பப் பணிகளைக் கவனிக்க, சி. சௌந்தர்ராஜன் படத்தினை இயக்குகிறார். எம். சரத்குமாரும், கீர்த்தி வாசனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மண்வாசம் கலந்த மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது இப்படத்தின் கதை. காளை மாடு வளர்க்கும் சாமானியனின் வாழ்வில், குடும்ப உறவுகளுக்கு மத்தியில் காதலா, காளை மாடா என்ற உணர்வுப்பூர்வமான பாசப்போராட்டத்தை கருவாகக் கொண்டது படத்தின் கதைக்களம். ஜாதி, மதங்களை ஒன்றிணைக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிகட்டினை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், மே மாதம் 3 ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.