‘ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். ஏனெனில் சவால் என்று வந்துவிட்டால், அவள் நரகத்தையும் விலை பேசுவாள்’ என்பதுதான் ‘மாம்’ படத்தின் மையக்கரு.
தேவகி சபர்வால், கணவர் ஆனந்துடனும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும் பிரியாவுடனும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏனோ ஒரு தாயுள்ளத்தின் உண்மையான மனமகிழ்ச்சியைத்தான் இன்னும் உணரவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. ஆரியாவால் தன் தந்தையிடம் காட்டும் நெருக்கத்தை தன் தாயிடம் காட்ட இயலவில்லை. ஒரு மகள் தன்னுடைய தாயின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெறுகிறாள், ஆனால் ஒரு தாய் தன்னுடைய மகளின் வாழ்வில் அத்தனை முக்கியத்துவம் பெறுவதில்லை என ஆர்யா திடமாய் நம்புகிறாள். வார்த்தைகளால் சொல்லாவிடினும், ஒரு தாய்க்குத் தானே தெரியும் தன் மகளை பற்றி என்று, தேவகியும் தன் மகள் ஒரு நாள் புரிந்துகொள்வாள் எனப் பொறுமையாகக் காத்திருக்கிறாள்.
இந்தச் சூழலில், திடீரென நடந்த ஒரு கொடூரமான நிகழ்வு, இருவருக்குமிடையேயான உறவில் சரி செய்ய முடியாத ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. தேவகி முன் இருப்பது, சரி எது தவறு எது என்பதல்ல. எது தவறு எது சரியல்ல என்பதே! இந்தப் போராட்டத்தில், தேவகி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பும், எடுக்கும் முடிவுகளும் மட்டுமே, அவளுக்கு தன் மகள் ஆர்யாவின் அன்பைப் பெற்று தரும்.
தேவகி சபர்வால் – ஸ்ரீதேவி கபூர்
ஆனந்த் சபர்வால் – அத்னான் சித்திக்
ஆர்யா சபர்வால் – சஜல் அலி
பிரியா அகர்வால் – ரீவா அரோரா
மேத்யு பிரான்சிஸ் எனும் ஒரு குற்றபிரிவு காவல்துறை அதிகாரியாக அக்ஷய் கண்ணா களமிறங்குகிறார். நேர்மையான மேத்யு, தன் வாழ்வின் மிகக் கடினமான, ஒரு சவாலான ஒரு வழக்கோடு போராடிக் கொண்டிருக்கிறார். தன் வாழ்நாளில் முதன் முறையாக ஒரு குற்றத்தைத் தன்னால் நிரூபிக்க முடியவில்லை என்பதை அவர் உணர ஆரம்பிக்கிறார்.
ஒரு சிறப்பு வேடத்தில் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார். தயாசங்கர் கபூர், சுருக்கமாக – டிகே, என எல்லோராலும் அழைக்கப்படும் வேடத்தில் நவாசுதீன் சித்திக் மிளிர்கிறார். தார்யகஞ்சின் மிக நெருக்கடியான பகுதியில் தூசிபடிந்த ஒரு சிறிய அலுவலகத்திலிருந்து கொண்டும், ஒரு ஆபத்தான ஸ்கூட்டரில் பயனித்துக் கொண்டும், சிறிய அளவிலான துப்பறியும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு துப்பறியும் நிபுணர். நகைச்சுவையான இவர், உணர்ச்சிவயப்பட்டு தன்னுடைய சக்திக்கு மீறிய ஒரு வழக்கில் தன்னை இணைத்து கொள்கிறார்.
இவர்கள் அனைவரையும் இணைப்பது ஒரு துயர சம்பவம். அதென்னவென்று தெரிந்து கொள்ள படம் பாருங்கள்.