Shadow

Tag: Sri Devi

சிங்கப்பூரில் – ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை

சிங்கப்பூரில் – ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை

சினிமா
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டுசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. லண்டனில் உள்ள மேடம் டுசார்ட் மெழுகுச் சிலை அருங்காட்சியம் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பிரபலங்களின் சிலைகளுக்காகவே சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இதைப் போல் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் மேடம் டுசார்ட் அருங்காட்சியகம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அளவில் மிகவும் புகழ் பெற்றதாகும். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டுசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மிஸ்டர் இந்தியா படத்தில் இடம் பெற்ற 'ஹவா ஹவாய்' பாடலி...
ஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது

ஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது

சினிமா, திரைத் துளி
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகையாகப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. அவர் தனது வழக்கம் போல், 2017 இல் வெளிவந்த மாம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். அது அவருக்குத் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அவரது இந்த 300வது திரைப்படமானது மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. அத்துடன் திரைத்துறையில் அவரது 50வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் திரைத்துறையில் பெற்றார். போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் Zee Studios வெளியிட்ட இந்தப் படம் தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது. சிறந்த பின்னணி இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்த இந்தப் படம், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ளது. இது குறித்து தயாரி...
மாம் விமர்சனம்

மாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆனந்தையும் அவரது மகள் ஆர்யாவையும், தன் குடும்பமாக வரித்து அளவில்லாப் பாசத்தைப் பொழிகிறார் தேவகி. ஆனால் ஆர்யாவால் தேவகியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்நிலையில் உடன் படிக்கும் மாணவன் ஒருவனால் ஆர்யா பலத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறாள். நொறுங்கிப் போகும் மகளை மீட்பதோடு, தேவகி எப்படி தன் அன்பை மகளுக்குப் புரிய வைக்கிறார் என்பது தான் படத்தின் கதை. இரண்டு லாலிவுட் (லாகூர்/பாகிஸ்தான் சினிமா) நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒன்று, ஸ்ரீதேவியின் கணவராக நடித்திருக்கும் அத்னான் சித்திக்; மற்றொன்று, ஸ்ரீதேவியின் மகளாக நடித்திருக்கும் சாஜல் அலி. அத்னான் சித்திக் பார்ப்பதற்கு 'துருவங்கள் பதினாறு' ரஹ்மான் போல் அசத்தலாக உள்ளார். மனைவியைச் சமாதானம் செய்வதாகட்டும், தாயை மறக்க முடியாமல் தேம்பும் மகளைத் தேற்றுவதாகட்டும், குற்றவாளிகள் நிரபராதியெனத் தீர்ப்பளிக்கப் படும்பொழுது கோபப்ப...
மாம்: பெண்ணின் வலிமை

மாம்: பெண்ணின் வலிமை

சினிமா, திரைத் துளி
‘ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். ஏனெனில் சவால் என்று வந்துவிட்டால், அவள் நரகத்தையும் விலை பேசுவாள்’ என்பதுதான் ‘மாம்’ படத்தின் மையக்கரு. தேவகி சபர்வால், கணவர் ஆனந்துடனும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும் பிரியாவுடனும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏனோ ஒரு தாயுள்ளத்தின் உண்மையான மனமகிழ்ச்சியைத்தான் இன்னும் உணரவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. ஆரியாவால் தன் தந்தையிடம் காட்டும் நெருக்கத்தை தன் தாயிடம் காட்ட இயலவில்லை. ஒரு மகள் தன்னுடைய தாயின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெறுகிறாள், ஆனால் ஒரு தாய் தன்னுடைய மகளின் வாழ்வில் அத்தனை முக்கியத்துவம் பெறுவதில்லை என ஆர்யா திடமாய் நம்புகிறாள். வார்த்தைகளால் சொல்லாவிடினும், ஒரு தாய்க்குத் தானே தெரியும் தன் மகளை பற்றி என்று, தேவகியும் தன் மகள் ஒரு நாள் புரிந்துகொள்வாள் எனப் பொறுமையாகக் காத்திருக்கிறாள். இந்த...
மாம் – மொத்த உலகத்திற்குமான படம்

மாம் – மொத்த உலகத்திற்குமான படம்

சினிமா, திரைச் செய்தி
“மாம் ஒரு ஹிந்திப் படம். ஆனா அது மொத்த இந்தியாவிற்கான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. ஏன், உலகம் முழுவதற்குமான கதையைக் கொண்டது. சைனா, அமெரிக்கா, ஈரோப் என எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், குடும்பம் என்ற அமைப்பை ரொம்ப மதிக்கிறாங்க. இந்தப் படம் பெற்றோர்கள் செய்யும் தியாகம் பற்றிப் பேசுகிறது” என்றார்படத்தின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான். “என் கணவர் இந்தக் கதையின் கருவை என்னிடம் சொன்னார். இப்படத்தை நான் கண்டிப்பாகப் பண்ணணும்னு முடுவு பண்ணேன். பின் கதையை டெவலப் செய்யவே இரண்டு வருடமானது. நானும் ரவியும் (இயக்குநர் ரவி உதய்வார்), இந்தப் படத்திற்கு எப்படியாவது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என விரும்பினோம். என் கணவர் போனி கபூர், ரஹ்மானை இசையமைக்க அழைத்து வந்தார். அவர் இசையில் நான் நடிக்கும் முதல் படம். ஏ.ஆர்.ரஹ்மான் எங்கள் படத்திற்கு இசையமைத்துள்ளதால், இந்தப் படத்திற்கான வீச்சு மிகப் பெ...