“மாம் ஒரு ஹிந்திப் படம். ஆனா அது மொத்த இந்தியாவிற்கான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. ஏன், உலகம் முழுவதற்குமான கதையைக் கொண்டது. சைனா, அமெரிக்கா, ஈரோப் என எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், குடும்பம் என்ற அமைப்பை ரொம்ப மதிக்கிறாங்க. இந்தப் படம் பெற்றோர்கள் செய்யும் தியாகம் பற்றிப் பேசுகிறது” என்றார்படத்தின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான்.
“என் கணவர் இந்தக் கதையின் கருவை என்னிடம் சொன்னார். இப்படத்தை நான் கண்டிப்பாகப் பண்ணணும்னு முடுவு பண்ணேன். பின் கதையை டெவலப் செய்யவே இரண்டு வருடமானது.
நானும் ரவியும் (இயக்குநர் ரவி உதய்வார்), இந்தப் படத்திற்கு எப்படியாவது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என விரும்பினோம். என் கணவர் போனி கபூர், ரஹ்மானை இசையமைக்க அழைத்து வந்தார். அவர் இசையில் நான் நடிக்கும் முதல் படம். ஏ.ஆர்.ரஹ்மான் எங்கள் படத்திற்கு இசையமைத்துள்ளதால், இந்தப் படத்திற்கான வீச்சு மிகப் பெரியதாகி உள்ளது.
குழந்தைகளுக்காக எந்த எல்லைக்கும் போகக் கூடிய ஒரு தாயைப் பற்றிய கதை இது” என்றார் ஸ்ரீதேவி.
“அக்ஷய் கண்ணா எங்கள் படத்தில் நடித்துள்ளார். நவாஸுதின் சித்திக்கை நடிக்கக் கேட்ட பொழுது, அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் முடியாதெனச் சொல்லிட்டார். கதையைக் கேட்ட பிறகு, நடிக்கச் சம்மதித்தார். இந்தப் படம் ஒரு தாயின் எமோஷ்னல் ஜர்னி” என்றார் ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளரான போனி கபூர்.
ஸ்ரீதேவியின் மகளாக பாகிஸ்தான் நடிகை சாஜல் அலியும், மற்றொரு முக்கிய வேடத்தில் பாகிஸ்தான நடிகர் அத்னன் சித்திக்கும் நடித்துள்ளதால், படம் பாகிஸ்தான் ரசிகர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 7 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என நான்கு மொழிகளிலும் படம் வெளியாகியுள்ளது. நான்கு மொழிகளிலுமே ஸ்ரீதேவியே டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.