32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நட்புனா என்னானு தெரியுமா – படக்குழுவின் பரிசுப் போட்டி

Dinesh R சேலம் Published: 07/11/2017 1 நிமிட வாசிப்பு Updated: 09/11/2017 சினிமா
எழுத்து அளவு:

Natpuna ennanu theriyuma movie competition

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் நட்புனா என்னானு தெரியுமா. விஜய் டிவி புகழ் கவின் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவம்பர் 12 ஆம் தேதி அன்று சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாகக் கலந்து கொள்ளலாம். ‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல அற்புதமான பரிசுகளையும் அள்ளிச் செல்லலாம்..

பரிசுப்பொருட்கள் விபரம்:

• 32 கிராம் தங்க காசுகள்
• 6 நாட்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணம் (விமானம், சாப்பாடு வசதி உட்பட) – 2 நபர்களுக்கு
• சாம்சங் S8 போன்
• சோனி ஹோம் தியேட்டர் 4100
• சோனி டிவி 4k (50 இன்ச்)
• பிளேஸ்டேஷன் – 4 (4 ஜாய்ஸ்டிக்குகளுடன்)
• டெல் i5 மாடல் 7567 (8gb ram 1 TB hard disk, etc..)

உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அழைத்து வாருங்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எஞ்சாய் பண்ணுங்கள்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.