விளையாட்டாய்த் தொடங்கும் ஒரு விளையாட்டு மரணத்தைக் கொணரும் வினையாகிவிட்டால்?
‘ட்ரூத் ஆர் டேர் (Truthu or Dare)’ படத்தின் கதைக்கரு வினையாகும் அத்தகைய விளையாட்டைக் குறித்துத்தான். இந்த உயிர் போகும் விளையாட்டில், பத்தொன்பது வயதே நிரம்பிய மூன்று மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். பொதுநலனை மையமாகக் கொண்டு யூ-ட்யூப்பில் வீடியோ ப்ளாக்கிங் செய்யும் ஒலிவியாவும், தன் தந்தையின் தற்கொலையில் இருந்து மீள முடியாமல் அவள் தோழி மார்கியும், தங்களைத் துரத்தும் மரணத்தில் இருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
சூப்பர் நேட்சுரல் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்தது இப்படம். ஏப்ரல் 20ஆம் தேதி, ஹன்ஸா பிக்சர்ஸ் ‘ட்ரூத் ஆர் டேர்’ படத்தை வெளியிடுகிறது.