Shadow

Tag: Hansa Pictures

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. பாஜகவைச் சார்ந்த குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார். முதல் பாதி முழுவதுமே, காணச் சகியாக் காட்சிகளாகவே உள்ளன. ஊரைக் கொளுத்துவது, பெண்களைப் பலாத்காரம் செய்வது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என ரஸாக்கர்களின் கொடுமையை விரிவாகக் காட்டுகின்றனர். வரலாற்றைத் தெரிய...
தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பாறையில் கடல் அலைகள் மோதி, அந்த நீரலைகள் கீழே விழும் பொழுது 'தி இன்விசிபிள் மேன்' எனப் பெயர் போடுவதே அட்டகாசமாக உள்ளது. மலையுச்சியில் இருக்கும் பங்களாவில் இருந்து செசிலியா காஸ் எனும் பெண், தப்பிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்குத் தொற்றிக் கொள்ளும் பதற்றம் படம் முழுவதுமே தொடர்கிறது. பல இடங்களில், பெஞ்சமின் வால்ஃபிஷின் பின்னணி இசை மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது. அந்தத் தொந்தரவு, செசிலியா காஸிற்குக் கண்ணுக்குப் புலனாகாத அவளது காதலன் ஆட்ரியன் தரும் டார்ச்சர். தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடும் ஆட்ரியன், தான் கண்டுபிடித்த மாயமாகும் உடையை அணிந்து கொண்டு, செசலியா காஸ் யாருடனெல்லாம் நெருக்கமாக இருக்கிறாளோ அவர்களிடம் இருந்தெல்லாம் பிரிக்கிறான். மனதளவில் அவளை முடக்கும் முயற்சியில், செசிலியாவின் சகோதரியையே கொன்று அந்தப் பழியையும் செசிலியா மீது போடுகிறான் ஆட்ரியன். கண்ணுக்குத் தெரியாத ஒரு...
கட்புலனாகாத சைக்கோ மனிதன்

கட்புலனாகாத சைக்கோ மனிதன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘தி இன்விசிபிள் மேன்’ எனும் அறிவியல் புனைவு நாவலை 1897 இல் எழுதினார் H.G.வெல்ஸ். அதை அடிப்படையாகக் கொண்டு, 1933 இல் ‘தி இன்விசிபிள் மேன்’ எனும் திரைப்படம் உருவானது. அதைத் தொடர்ந்து, 1940 இல் 'தி இன்விசிபிள் மேன் ரிட்டர்ன்ஸ்', 1951 இல் 'அபோட் அண்ட் காஸ்டெல்லோ மீட் தி இன்விசிபிள் மேன்', 1984 இல் சோவியட் படமான 'தி இன்விசிபிள் மேன்', 2000இல் வெளிவந்த 'ஹாலோ மேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, H.G.வெல்ஸின் நாவலைத் தழுவி, 'தி இன்விசிபிள் மேன் (2020)' படம் வ்ளியாகவுள்ளது. பணக்காரனும், அதிமேதாவி விஞ்ஞானியுமான ஆலிவர் ஜாக்ஸன் கோஹனின் வன்முறையைக் கையாளும் உறவில் இருந்து, ஓரிரவு தப்பிச் சென்று தலைமறைவாகிறார் செசிலியா காஸ். ஒருநாள் ஆலிவர் ஜாக்ஸன் கோஹன் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது பெரும் சொத்து செசிலியா காஸ்க்குக் கிடைக்கும்படி உயில் எழுதி வைக்கிறான். அவன் இறந்துவிடவில்லை, அரூபமாய் மாறி தன்னை டார்ச்சர்...
தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என்ன செய்யும் என்ற முதல் பாகத்தின் கதைதான், கலகலப்பான இரண்டாம் பாகத்தின் கதையும். மேக்ஸ், ட்யூக், கிட்ஜெட், ஸ்னோ பால் என தி சேக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் படத்தில் வந்த பிரதான கதாபாத்திரங்கள் அப்படியே வருகின்றன. மேக்ஸையும், ட்யூக்கையும் வளர்க்கும் கேட்டிக்குக் கல்யாணமாகி, லியாம் எனும் குழந்தையும் பிறக்கிறது. கைக்குழந்தையான லியாமிடம் மேக்ஸ் படும்பாடு கொஞ்சம் நஞ்சமில்லை. பின், லியாம் கொஞ்சம் வளர்ந்ததும், அவர்களுக்குள் பிரிக்கவியலாப் பந்தம் உருவாகிறது. குழந்தைகளுக்கும், செல்லப்பிராணிகளுக்குமான உறவு மிகவும் அலாதியானவை. படம் முடிந்ததும், சில அழகான லைவ் ஃபூட்டேஜையும் போட்டு அசத்துகின்றனர். படத்தில் மொத்தம் மூன்று கிளைக்கதைகள். கேட்டி தனது குடும்பத்தோடு ஒரு பண்ணை வீட்டுக்குச் சுற்றுலா போக, பயந்தாங்கொள...
மீண்டும் மேக்ஸின் லூட்டி – தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்

மீண்டும் மேக்ஸின் லூட்டி – தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘இல்லுமினேஷ்ன் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில், 2016 இல் வெளிவந்த, தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் எனும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. செல்லப் பிராணிகள், தன்னை வளர்க்கும் குடும்பத்தினரோடு எப்படி உணர்வுபூர்வமாகக் கலந்து கொள்கின்றன என்பதுதான் இந்தப் பாகத்தின் பிரதான கரு. முதற்பாகத்தை இயக்கிய க்றிஸ் ரெனாட் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். வளர்ப்பவருடன் புது பண்ணை வீட்டிற்குச் செல்லும் மேக்ஸும், அவன் நண்பர்களும், தங்கள் பயத்தைக் கடந்து எப்படி ஹீரோவாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. படத்திற்கு அலிக்சான்ட்ரூ டெஸ்ப்லா இசையமைத்துள்ளார். உலகமெங்கும் யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட, இப்படத்தைத் தமிழகத்தில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது....
ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்

ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘ஹாலோவீன்’ என்ற பெயரில், 40 வருடங்களுக்கு முன் வந்த படத்தின் 11வது பாகம் இது. இந்தப் பாகத்தின் விசேஷம் என்னவென்றால், 1978இல் வந்த முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இடையில் வந்த மற்ற பாகங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. 1978 இல் வந்த ஹாலோவீன் படத்தில், மைக்கேல் மையர்ஸ் என்பவன், ஹாலோவீன் இரவு அன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபிசிட்டர்களைக் கொல்கிறான். அவனிடம் இருந்து தப்பிய லாரீ ஸ்ட்ரோடை, 40 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொல்ல வருகிறான் மைக்கேல் மையர்ஸ். ஆனால், இம்முறை லாரீ அம்முகமூடி கொலைக்காரனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளாள். 105 நிமிடங்கள் கால அளவு கொண்ட படத்தின் முடிவில், மைக்கேல் மையர்ஸிடம் இருந்து லாரீ ஸ்ட்ரோட் தப்பினாளா என்பதற்கான விடையுடன் படடம் நிறைவுறுகிறது. ஒன்பது வருடங்களுக்குப் பின் இத்தொடரின் அடுத்த படம் வருவதாலும், முதல் பாகத்தின...
ட்ரூத் ஆர் டேர் விமர்சனம்

ட்ரூத் ஆர் டேர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு விளையாட்டு - நட்பை உடைக்கிறது; காதலை முறிக்கிறது; நம்பிக்கையைக் காலி செய்கிறது; உயிரையும் எடுத்துவிடுகிறது. தெரியாத்தனமாகச் சிக்கிக் கொண்டால் அவ்விளையாட்டிலிருந்து மீள வழியே இல்லை. மெக்சிகோவிற்குச் சுற்றுலா சென்ற ஒலிவியாவும் அவரது நண்பர்களும், அங்குச் சந்திக்கும் நபரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு விளையாட்டைத் தொடங்குகிறார்கள். அதன் பெயர் “ட்ரூத் ஆர் டேர்”. விளையாடுபவரிடம் சுற்றியுள்ளவர்கள், ட்ரூத் ஆர் டேர் எனக் கேட்பார்கள். ‘ட்ரூத்’தைத் தேர்ந்தெடுத்தால், நண்பர்களிடம் உண்மையைச் சொல்லவேண்டும். ‘டேர்’ எனத் தேர்ந்தெடுத்தால், நண்பர்கள் சொல்லும் டாஸ்க்கைச் செய்யவேண்டும். உதாரணம், ‘மேலாடையைக் கழட்டவும்’ எனச் சொல்லப்பட்டால், மேலாடைகளைக் கழட்டவேண்டும். இப்படிக் குதூகலமாய்த் தொடங்கும் ஒரு விளையாட்டு, அவர்கள் மெக்சிகோவை விட்டு வந்த பின்பும் அவர்களைத் தொடங்குகிறது. அனைத்தையும் கட்டுபடுத்தும் ஏதோ ஓர்...
பொய் சொன்னால் மரணம்

பொய் சொன்னால் மரணம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
விளையாட்டாய்த் தொடங்கும் ஒரு விளையாட்டு மரணத்தைக் கொணரும் வினையாகிவிட்டால்? ‘ட்ரூத் ஆர் டேர் (Truthu or Dare)’ படத்தின் கதைக்கரு வினையாகும் அத்தகைய விளையாட்டைக் குறித்துத்தான். இந்த உயிர் போகும் விளையாட்டில், பத்தொன்பது வயதே நிரம்பிய மூன்று மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். பொதுநலனை மையமாகக் கொண்டு யூ-ட்யூப்பில் வீடியோ ப்ளாக்கிங் செய்யும் ஒலிவியாவும், தன் தந்தையின் தற்கொலையில் இருந்து மீள முடியாமல் அவள் தோழி மார்கியும், தங்களைத் துரத்தும் மரணத்தில் இருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. சூப்பர் நேட்சுரல் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்தது இப்படம். ஏப்ரல் 20ஆம் தேதி, ஹன்ஸா பிக்சர்ஸ் ‘ட்ரூத் ஆர் டேர்’ படத்தை வெளியிடுகிறது....
மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3

மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஃப்ரான்ஸில் உள்ள ‘மெக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன் ஸ்டூடியோவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட படம்தான், ‘டெஸ்பிக்கபிள் மீ’ திரைப்படம். 69 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அப்படம், 543.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துக் குவித்தது. அதன் தொடர் படமாக 2013 இல் வெளிவந்த டெஸ்பிக்கபிள் மீ 2 அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டு 970.8 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்தது. அவ்விரு படங்களையும் பியரீ காஃபின் மற்றும் க்ரிஸ் ரெனாட் ஆகிய இருவரும் இயக்கியிருந்தனர். மூன்றாவது தொடர் சங்கிலித் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள மகத்தானதொரு முப்பரிமாணத் திரைக்காவியம் தான், ‘டெஸ்பிக்கபிள் மீ 3’. இடையே, 2015இல், ‘டெஸ்பிக்கபிள் மீ’ படத்தொடர்களின் முன்னோடியாக 74 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட படம், ‘மினியன்ஸ்’. பியரீ காஃபினோடு இ...
தி மம்மி விமர்சனம்

தி மம்மி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மம்மி படத்தில் டாம் க்ரூஸ் நடிக்கிறார் என்ற செய்தி, ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ரகசிய தீவிரவாத சிண்டிகேட்களை வேரறுக்கும் டாம் க்ரூஸ் எகிப்தியக் கல்லறைக்கு என்ன வேலையாகப் போயிருப்பார் என்ற ஆவலே அதற்குக் காரணம். ஈராக்கில் (மெசொப்பொதாமியா), எதிர்பாராத விதமாய்ப் புராதனமான கல்லறை (சிறை) ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் நிக் மோர்டன். அந்தப் பாதாளச் சிறையில் புதைக்கப்பட்டிருக்கும் எகிப்திய இளவரசி அஹமனெத்தின் கல்லறைப் பெட்டி பாதரசத்திலிருந்து எடுக்கப்பட்டதும், பாலைவனப் புயல்களைக் கட்டுப்படுத்தும் இருள் கடவுளான செத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் நிறைவேற்றிக் கொள்ள காய்களை நகர்த்தத் தொடங்கி விடுகிறார் அஹமனெத். இளவரசியால் பீடிக்கப்படும் நிக் மார்டனின் கதியென்ன ஆனது என்றும், கடவுள் செத்துடன் இளவரசி செய்து கொண்ட ஒப்பந்தம் என்னானது என்பதும் தான் படத்தின் கதை. 1999இல், ப...
டாம் க்ரூஸின் ‘தி மம்மி’

டாம் க்ரூஸின் ‘தி மம்மி’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
1999ஆம் ஆண்டு, இதே தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய படம்தான், ‘தி மம்மி’. 2001இல், ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ் (The Mummy Returns)’ என்கிற இரண்டாம் பாகமும் வெளியாகி உலகெங்கிலும் பெரியதொரு பரபரப்பை உருவாக்கியது. அவ்விரு படங்களுமே உலக அளவில் மிகப் பெரிய வசூலை வாரிக் கொட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு படங்களையுமே ஸ்டீஃபன் சோமோர்ஸ் இயக்கியிருந்தார். சற்று இடைவெளிக்குப் பிறகு 2008இல், ‘தி மம்மி: டூம்ப் ஆஃப் தி ட்ராகன் எம்பரர்’ வெளியாகி, அப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. ராப் கோஹன் அம்மூன்றாம் பாகத்தை இயக்கியிருந்தார். இம்மூன்று தொடர் படங்களைத் தவிர கிளைத் திரைப்படங்களாக ‘தி ஸ்கார்பியான் கிங் (The Scorpion King)’ போன்றவையும் வெளியாகின. இரண்டு காமிக் கதைப் புத்தகங்களும் கூட ‘மம்மி’ கதைக்கருவை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டன. கிட்டதிட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அலெக்ஸ் கர்ஸ்மெனின் நேர...
வில்லனாகிறார் வின் டீசல்

வில்லனாகிறார் வின் டீசல்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
பால் வாக்கருக்கு விடையளித்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7, பெரும் வசூலை ஈட்டிய வெற்றிப்படமாக அமைந்தது. அத்தொடரின் எட்டாவது பாகத்தில், நாயகர்களில் ஒருவரான வின் டீசல் வில்லனாகிறார். ஒரு மனிதனுக்கு குடும்பம் மிக அவசியம் எனக் கொள்கையுடைய டொமினிக் டொரெட்டோ எனும் கதாபாத்திரத்தில் வருபவர் வின் டீசல். கார் சேஸ்களைத் தவிர்த்து, எல்லாப் பாகத்திலும் குடும்பத்தை ஒருங்கிணைப்பதிலே கவனம் செலுத்துவார். அவரைக் குடும்பத்தில் இருந்து பிரித்து சார்லிஸ் தெரான், குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறார். எப்படி அவரது குடும்பம் அதிலிருந்து மீட்கிறது என்பதுதான் படத்தின் கதை. வ்ரெஸ்ட்லிங் புகழ் ராக், ஜேஸன் ஸ்டாத்தம், மிஷால் ரோட்ரிகஸ் ஆகியோர்கள் இப்பாகத்திலும் நடிக்கிறார்கள். போன பாகத்தில் எலியும் பூனையுமாக இருந்த ராக்கும், ஜேஸன் ஸ்டாத்தமும், இப்பாகத்தில் வின் டீசலை வீழ்த்த இணைகின்றனர். கியூபாவின் கரையோரங்களிலும், நியூ ...
சீனப் பெருஞ்சுவரைத் தாக்கும் வினோத மிருகங்கள்

சீனப் பெருஞ்சுவரைத் தாக்கும் வினோத மிருகங்கள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
வில்லியம் கெரினும், பெரோ டோவாரும் வெடிமருந்தினைத் தேடி சீனா வருகிறார்கள். வழியில் வினோத மிருகத்தினால் அவர்கள் குழு தாக்கப்பட வில்லியமும் பெரோவும் மட்டும் உயிர் தப்புகின்றனர். 5500 மைல்கள் நீளம் கொண்ட சீனப் பெருஞ்சுவரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜெனரல் ஷாவ், உயிர் தப்பிய ஐரோப்பியர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார். தொடரும் சம்பவங்கள், வினோத மிருகங்களிற்கு எதிரான போரில் வில்லியமைத் தலைமை தாங்கச் செய்கிறது. வில்லியமாக ஹாலிவுட் நாயகன் மேட் டேமன் நடித்துள்ளார். ஆனால், ‘தி கிரேட் வால்’ ஹாலிவுட் படமன்று. படத்தை இயக்கியுள்ளவர் சீன இயக்குநரான ஷாங் யிமோ (Zhang Yimou). சீனப் படங்களை இயக்கி பல விருதுகளைப் பெற்றுள்ள ஷாங் இயக்கும் முதல் நேரடி ஆங்கிலப்படமிது. படத்தின் பட்ஜெட் 150 மில்லியன் டாலர் என்பதன் மூலமே படத்தின் பிரம்மாண்டத்தை யூகிக்கலாம். சீனப் பெருஞ்சுவரில் படப்பிடிப்ப...
ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம்

ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நம்மால் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவே முடியாத ஒரு கதையை, மிக நேர்த்தியான நகைச்சுவைப் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் ஷரோன் மக்வயர் (Sharon Maguire). ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் சீரிஸில் இது மூன்றாவது படம். முந்தைய பாகங்களைப் பார்க்கவிடினும் கூடப் பாதகமில்லை. இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கலகலப்பாக்கிவிடும். படத்தின் கதை அப்படி. 43 வயதாகும் ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் கர்ப்பமாகிறார். பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை முன்னாள் காதலன் மார்க் டார்சியா அல்லது இசை விழாவில் சந்தித்த அந்நியனான ஜாக் க்வான்ட்டா என்பதில் நிச்சயமற்று இருக்கிறார் ப்ரிட்ஜெட்.  மூன்று படங்களுமே ப்ரிட்ஜெட்க்கு ஏற்படும் உறவுச் சிக்கல்கள் பற்றியதே! 1995இல் எழுத்தாளர் ஹெலன் ஃபீல்டிங் எழுதிய நாவலான “ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் டைரி”யை அடிப்படையாகக் கொண்டு, 2001 இல் முதல் பாகம் வந்தது. 1999இல் எழுதப்பட்ட 'ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்: எட்ஜ் ஆஃப் ரீசன...