32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பூக்கி – மார்ச் 13 முதல் | Zee 5

Dinesh R சேலம் Published: 05/03/2026 2 நிமிட வாசிப்பு Updated: 06/03/2026 OTT
எழுத்து அளவு:

ஜீ 5 இல், பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.

‘பூக்கி’ திரைப்படம், காதலர்கள் பிரிந்த பின்பும் ஒருவரை ஒருவர் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், நகைச்சுவையுடன் கூடிய உணர்ச்சிப்பூர்வமான பயணத்தைச் சித்தரிக்கிறது. நவீன உறவுகளின் குழப்பம், பாசம் மற்றும் முரண்பாடுகளை இந்தப் படம் சுவாரசியமாக வெளிப்படுத்துகிறது.

படத்தின் தயாரிப்பாளரும் இசையமைப்பாளரும் படத்தொகுப்பாளருமான ப்மற்றும் விஜய் ஆண்டனி, “‘பூக்கி’ வெளிப்படையாக ஒரு எளிய கதையாகத் தோன்றினாலும், இன்றைய உறவுகளில் உள்ள உண்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. இயக்குநர் கணேஷ் சந்திரா இந்தப் படத்திற்குப் புதிய உற்சாகத்தையும் உண்மையான உணர்வுகளையும் கொண்டு வந்துள்ளார். நகைச்சுவையும் உணர்ச்சியும் ஒன்றாகக் கலந்து இந்தப் படம் உருவாகியுள்ளது” என்றார்.

நடிகை லட்சுமி மஞ்சு, “‘பூக்கி’ படத்தில் ஒரு அழகான எளிமை இருக்கிறது. காதல் ஜோடிகள் அனுபவிக்கும் சங்கடம், மென்மை மற்றும் எதிர்பாராத தருணங்களை இந்தப் படம் அழகாகப் பதிவு செய்கிறது. இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் ZEE5 பார்வையாளர்கள் இந்தப் படத்தின் உணர்வுகளை நிச்சயம் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.