32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அனோமி விமர்சனம் | Anomie review

Dinesh R சேலம் Published: 05/03/2026 2 நிமிட வாசிப்பு Updated: 06/03/2026 சினிமா
எழுத்து அளவு:

அனோமி என்றால் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, நம்பிக்கையிழந்து, குறிக்கோள் இன்றி நிற்கும் ஒரு நிராதரவான நிலையைக் குறிப்பதாகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மன அழுத்தத்தில் உள்ள ஜியான் பிலிப் இறந்து போகிறார். அதைத் தற்கொலை என காவல்துறை அதிகாரி ஜிப்ரான் வழக்கை முடிக்க, அது தொடர் கொலைகளில் ஒன்றென நீதிமன்றத்தில் நிறுவுகிறார் ஃபாரன்ஸிக்கில் வேலை செய்யும் ஜியானின் தமக்கை ஜாரா பிலிப். சைக்கோ கொலைக்காரனைப் பிடித்தாக வேண்டிய அழுத்தம் ஜிப்ரானுக்கு நேரிடுகிறது. தம்பியைக் கொன்றவனை ஜாராவும் மும்மரமாகத் தேடுகிறார். கொலை செய்தது யார் என்றும், எதற்காகக் கொலை செய்தனர் என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

காவல்துறை அதிகாரி ஜிப்ரானாக ரஹ்மான் நடித்துள்ளார். முதற்பாதியில் சற்றே அலட்சியமாக இருப்பவர், நீதிமன்றத் தலையிடலுக்குப் பின், இரண்டாம் பாதியில் துரிதமாகச் செயற்பட்டுக் குற்றவாளியை அணுகுகிறார். அழுத்தமாக அவரது கதாபாத்திர வார்ப்பு இல்லாவிட்டாலும், இரண்டாம் பாதியில் அவரது கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.

பாசமான அன்புத் தமக்கையாகவும், ஃபாரன்ஸிக் அதிகாரியாகவும் ஜாரா பிலிப் எனும் பாத்திரத்தில் பாவனா நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் பாவனாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தம்பியைக் கொன்றவன் யாரெனத் தெரிந்தே ஆகவேண்டும் என அவர் தனியாக விசாரணை மேற்கொள்கிறார். காவல்துறையை நம்பாமல் அவர்களை நீதிபதி முன் சிக்க வைக்கவும் செய்கிறார்.

த்ரில்லர் படமாகச் சென்று கொண்டிருக்கும்போது, ப்ரீ-க்ளைமேக்ஸில் (Pre-Climax) இல் அறிவியல் புனைவாக ஓர் அத்தியாயத்தைக் காட்சிப்படுத்தியுள்ளனர். மரணம் நிகழ்ந்ததும் மனிதனுக்கு என்னாகிறது என்பதை விஷுவலாகக் காட்ட முற்பட்டுள்ளனர். மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவக் கதைகளைச் (NDE – Near Death Experience) சான்றாகக் கொண்டு அவ்விஷுவலை அழகாக உருவாக்கியுள்ளனர். ஒளிச்சுரங்கத்தைக் காட்டுகின்றனர். ஆனால் சுரங்கத்தின் முடிவில், அடுத்த பரிமாணத்தின் வாயிலான அதீத பிரகாசத்தைக் காட்டாமல், சுரங்கம் தொடங்கப்படும் நிலத்திலேயே முடிவடைவதாகக் காட்டுகின்றனர்.

மனநல சிகிச்சை எடுப்பவர்கள் மட்டும் ஏன் குறி வைத்துக் கொல்லப்படுகின்றனர் என்ற கேள்விக்குச் சுவாரசியமானதொரு கதையைச் சொல்லியுள்ளார் எழுதி இயக்கியுள்ள ரியாஸ் மரத்.sre

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.