Shadow

சென்னை திருமங்கல ரக்க்ஷகர்களுக்கு ராக்கி

thirumangalam-police

மெட்ராஸ் மெட்ரோபாலிடன் ரெளண்ட் டேபிள் 95 மற்றும் மெட்ராஸ் மெட்ரோபாலிடன் லேடிஸ் சர்க்கிள் 70 -இன் உறுப்பினர்கள், இன்று திருமங்கலம் காவல் நிலையத்திற்குத் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

“எங்கள் குழந்தைகளுடன் திருமங்கலம் காவல் நிலையத்தைப் பார்வையிட்டோம். 24/7 எங்களைப் பாதுகாக்கும் காவல்துறையினர் தான் எங்களுக்கு உண்மையான ரக்‌ஷகர்கள் என்ற உண்மையை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு வலியுறுத்தினோம்.

நாங்கள் அங்குள்ள 50 காவல்துறையினர்க்கு ராக்கிகளைக் கட்டி இனிப்புகளை விநியோகித்தோம். இன்ஸ்பெக்டர் திரு.ரவி குழந்தைகளுக்குக் காவல் நிலையத்தைச் சுற்றிக் காண்பித்தார். துப்பாக்கியைப் பயன்படுத்துவதையும், மக்களைப் பாதுகாக்க அவர்கள் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கை பற்றியும் குழந்தைகளுக்கு விளக்கினார். காவல்துறையினரை நண்பர்களாகக் கருத வேண்டும் என்றும் அவர்களை அழைக்க ஒருபோதும் தயங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த வருட ரக்க்ஷபந்தனைக் காவல்துறையினருக்குச் சமர்ப்பிக்கிறோம்” என்று மெட்ராஸ் மெட்ரோபாலிடன் ரெளண்ட் டேபிள் 95 மற்றும் மெட்ராஸ் மெட்ரோபாலிடன் லேடிஸ் சர்க்கிள் 70 -இன் உறுப்பினர்கள் மகிழ்ச்சியாகக் கூறினர்.