ஒன் பிளஸ் மொபைல் நிறுவனம், ஆகஸ்ட் 18 அன்று சென்னையில் ஸ்டோர் தொடங்கி தனது முதலாம் ஆண்டினைக் கோலாகலமாகக் கொண்டாடியது. அக்கொண்டாட்டத்திற்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணமாக இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு, அவரது இசையிலிருந்து சில பாடல்களக்ப் பாடி, கொண்டாட்டத்தை மறக்கவியலாத நிகழ்வாக மாற்றினார். சமீபத்தில் வெளியான ஒன் பிளஸ் 7 ப்ரோ (OnePlus 7 Pro) மொபைல் ஒன்றினையும் பார்வையாளர்களுக்குத் திறந்து காட்டினார். ஒன் பிளஸ் சமூகத்தின் அதிர்ஷ்டன் வாயெத ரசிகர்களுக்குக் கையெழுத்திட்டு, அவர்களை மகிழ்வித்தார்.
ஒன் பிளஸின் ஜெனரல் மேனஜரான விகாஸ் அகர்வால், “இந்த ஓராண்டு நிறைவு, எங்கள் இந்தியப் பயணத்தில் முக்கியமான மைல்கல் ஆகும். இந்தப் பயணம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிரத்தையோடு எடுக்கும் முயற்சிகளின் ஓர் அங்கமாகும். எங்கள் நோக்கம், இந்தியாவில் 1500 ஆஃப்லைன் ஸ்டோர்கள் தொடங்குவதே! இந்த மகிழ்ச்சியான தருணத்தை ஒன் பிளஸைத் தொடரும் வாடிக்கையாளர் சமூகத்துடன் பகிர்ந்து கொகிறோம்” என்றார்.
தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனிருத், “இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என்னை அழைத்ததற்கு ரொம்ப நன்றி ஒன் பிளஸ். என் இசையைக் காதலிக்கும் ஒன்பிளஸ் நேயர்களைச் சந்தித்ததை மிகப் பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். எப்படி ஒன் பிளஸ் தன் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த தொழில்நுட்பத்தை அளிப்பதில் கவனம் கொள்கிறதோ, அதே போல் நானும் என் ரசிகர்களுக்குச் சிறந்த இசையைத் தர முயற்சி செய்வேன்” என்றார்.
‘நெவர் செட்டில்’ என்ற மந்திரத்துடன் செயற்படும் ஒன் பிளஸ் இந்தியா, உயர்தர டிசைனுடன் கூடிய அதி நவீன ஹார்ட்-வேருடன் கூடிய தரமிகு ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்கி வருகிறது. ஒன் பிளஸிற்கான சிறந்த மார்கெட்டாக சென்னை விளங்குகிறது. ஒன் பிளஸின் நேரடி ஸ்டோர், ஆகஸ்ட் 2018 இல் சென்னையில், கம்பெனியின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்டது. சமீபத்தில் பூர்விகா மொபைல்ஸுடன் இணைந்து மேலும் பல ஆஃப்லைன் ஸ்டோர்கள் மூலமாக வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பைத் தக்க வைத்துக் கொள்கிறது.