32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி

Dinesh R சேலம் Published: 06/04/2017 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Radha Ravi speech

“சிவலிங்கா அபடத்தில் அழகா வர்றார் லாரன்ஸ். எப்பவும் அமைதியா தான் பேசுவார். ஆனா புரட்சி உள்ளம் படைச்சவர். இல்லைன்னா, ஒரு மனுஷன் ஜல்லிக்கட்டில் வந்து உட்காருவானா? நிறைய பேர் சொன்னாங்க, விளம்பரத்துக்காக வந்து உட்கார்ந்தார்னு. அவருக்கு விளம்பரம்லாம் தேவையில்ல!

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும். எங்கண்ணன் படத்தில் வரும் வசனம்’ என மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ராகவா வசனம் பேசியிருப்பார். படம் ஃபுல்லா நான் சொல்லியிருப்பேன். அவர் ரஜினி ரசிகர்னு எனக்குத் தெரியும். என் ரசிகர்கள் என்னிடம், ‘பாருங்க சார். உங்க மேல லாரன்ஸ்க்கு எவ்ளோ பிரியம் பாருங்க சார்’ எனச் சொன்னாங்க. ‘டேய், அவர் ரஜினிய சொன்னார்டா. நீ வேற ஒரு புரியாத பயல்டா’ எனச் சொன்னேன். ஏன் சொல்றேன்னா நம்ம மக்கள் புரியாத பயலுக. எதை நினைக்கிறது, எதை யோசிக்கிறது, எதை பண்றதுன்னு நம்ம மக்களுக்கு எதுவும் தெரியாது.

‘நல்லவன் வாழ்வான்’ படத்தில், புரட்சித் தலைவரும் எங்கப்பாவும் தேர்தலில் எதிரெதிராக நிற்பாங்க. அதில் புரட்சித் தலைவர் ஜெயிச்சிடுவார்; எங்கப்பா தோத்துடுவார். எங்கப்பாவைத் தோள் மேல் தூக்கிப் போட்டுக்கிட்டு ஆடுவாங்க. தலைவரையும் தூக்கிக்கிட்டு ஆடுவாங்க.

‘யார் ஜெயிச்சா? யார் தோத்தா?’ என எங்கப்பா கேட்பார்.

‘நாம தோத்துட்டோம். அவர் ஜெயிச்சுட்டாரு’ எனச் சொல்வாங்க.

‘ஏன்டா!! அடப்பாவிகளா ஜெயிச்சவனையும் தூக்கிக்கிட்டு ஆடுறீங்க! தோத்தவனையும் தூக்கிக்கிட்டு ஆடுறீங்க!! எப்படா இந்த நாடு உருப்படும்?’ என அப்ப (1961) கேட்டார். இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம்” என்றார் ராதாரவி.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.