32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நாரத்தை சாதம்

admin சேலம் Published: 23/10/2018 1 நிமிட வாசிப்பு Updated: 25/10/2018 சமையல்
எழுத்து அளவு:

வணக்கம் தோழிகளே,

IMG_20181013_084109IMG_20181013_231841

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நாரத்தை ஊறுகாய் தானே சாப்பிட்டிருக்கோம், சாதம் கூடவா? ஆமாங்க. நார்த்தை சாப்பிட்டா, இந்த வயிறு பொருமல், அஜீரணம், சூடு எல்லாம் பறந்து போயிரும். எங்க வீட்ல நார்த்தை சாதம் அப்படினாலே, கூடவே சட்னி வேணும்னு வேண்டுகோளும் வந்திரும்.

தேவையான பொருட்கள்:

நார்த்தைப் பழம்- 1

வெங்காயம்

தக்காளி

பூண்டு

மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – கைப்படி

உப்பு- தேவைக்கு

செய்முறை:

Step 1:
IMG_20181013_084149

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு போடவும்.

Step 2:

IMG_20181013_084343

கடுகு பொரிந்ததும்; வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

Step 3:

IMG_20181013_084325

நார்த்தைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். அந்தச் சாற்றை, இப்பொழுது ஊற்றி, மஞ்சள் தூள் போட்டுக் கலக்கி விட்டுக் கொதிக்க விடவும்.

Step 4:
IMG_20181013_084424

எண்ணெய் பிரிந்து வரும் சமயம், நன்கு மணம் வரும். அடுப்பை நிறுத்தவும்.

Step 5:
IMG_20181013_084502

தாளித்த கலவையை, வேக வைத்த சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டி பிடிக்காமல், நன்கு கிளறவும். தேவைக்குப் பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.

IMG_20181013_231841

நான் தேங்காய் சட்னி செய்வேன், இது கூடச் சாப்பிட அருமையா இருக்கும். குழந்தைங்க டிபன் பாக்சுக்கும் செய்து கொடுத்து அனுப்பலாம்.

சுவையான, ஆரோக்கியமான நார்த்தை சாதம் தயார். செஞ்சு பார்த்திட்டு சொல்லுங்க.

– வசந்தி ராஜசேகரன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.