
வணக்கம் தோழிகளே,
மீன் குழம்புன்னு பார்த்தா, ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு பக்குவம் இருக்கு. இன்னிக்கு, நாம கொங்கு நாட்டு புளி மீன் குழம்பு எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீன் – 1 கிலோ
சின்ன வெங்காயம் – ¼ கிலோ
பூண்டு – 5 பல்
கறி மசாலா தூள் – 1 கரண்டி
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
தக்காளி- 1
புளி- 1 முழு எலுமிச்சை பழம் அளவு
கறிவேப்பிலை- கைப்பிடி
உப்பு- தேவைக்கு
Step 1:
முதலில், சின்ன வெங்காயத்தையும், கறிமசாலா தூளையும் அப்படியே பச்சையா அரைச்சு எடுத்து வச்சுக்கோங்க.
Step 2:
பாத்திரத்தில், எண்ணெய் ஊத்தி, கடுகு போட்டுப் பொரிந்ததும், வெந்தயம் போட்டுச் சிவந்ததும், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
Step 3:
இப்போ, அரைச்ச விழுது, புளி தண்ணி, மஞ்சள் தூள், உப்பு, 1 ½ கப் தண்ணி ஊத்தி, நல்லா கொதிக்க விடுங்க.
Step 4:
நல்லா கொதிக்கணும். பச்சை வாசனை போய், நல்லா மணம் வரும். இப்போ கழுவி வச்சிருக்கிற மீனை அப்படியே தனித்னியா மெதுவா, குழம்புக்குள் போடவும். மூடி போட்டு வேக விடவும்.
Step 5:
ஒரு கொதி வந்தவுடன், சரியா 2 நிமிஷம் கழிச்சு அடுப்பில் இருந்து இறக்கி எடுத்து வச்சிருங்க. அந்தச் சூட்டிலேயே, நல்லா வெந்திரும்.
ஒரு 2 அல்லது 3 மணி நேரம் கழிச்சு சாப்பிட்டா, மீன் நல்லா ஊறிப் போய், சாதத்தோட சாப்பிட ச்சும்மா சூப்பரா இருக்கும். நேரம் ஆக ஆக, மீன் குழம்பு ருசி, சும்மா செமையா இருக்கும்.
செஞ்சு பார்த்திட்டுச் சொல்லுங்க.
– வசந்தி ராஜசேகரன்