
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும்.
இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடலான, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலைத் தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடியுள்ளர். இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டியும் “வாவ் சூப்பர்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடகர் விஜய் ஏசுதாஸ் உட்பட பலரும் வீடியோ பார்த்து வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த வீடியோ வெளியாகி உள்ளதால், ‘இப்பாடலின் ரீமிக்ஸ் வடிவம் இப்படத்தில் இடம்பெறுகிறதா? இப்பாடலை வெளியிடுங்கள்’ என ரசிகர்கள் ஆவலோடு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டணியின் மாயாஜாலத்தைத் திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.
படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது. ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.

