32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வெளியான உடனே ஹிட்டடித்த சரிகமா ஒரிஜினல்ஸின் “எண்ட ஓமனே” ஆல்பம்

Inbaaraja சேலம் Published: 18/04/2024 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

உலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம், அடுத்ததாக, தர்ஷன், அஞ்சு குரியன் நடிப்பில், கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில், பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் குரல்களில், இளைஞர்களை கொள்ளை கொள்ளும் அற்புதமான “எண்ட ஓமனே” எனும் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

உலகளவில் இசைத்துறையில் ஆளுமைமிக்க நிறுவனமாக, பல்லாண்டுகளாக கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் “சரிகமா”. திரை இசைப் பாடல்கள் மட்டுமின்றி, சுயாதீன இசையை தொடர்ந்து ஆதரித்து வரும் சரிகமா , பல புதுமையான ஆல்பங்களையும், சுயாதீன கலைஞர்களின் பாடல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் கொண்டாடி மகிழும் “எண்ட ஓமனே” எனும் புது ஆல்பம் பாடலை தற்போது வெளியிட்டுள்ளது.

கனா படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில், கேரள திருமண வீட்டின் கொண்டாட்ட பின்னணியில், வண்ணங்கள் பொழியும் அற்புத விஷுவல்களுடன், மனதை மயக்கும் மெலடியில் இப்பாடல் உருவாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் ஶ்ரீ இப்பாடலை வடிவமைத்து இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் S கணேசன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கத்தினை R கிஷோர் செய்துள்ளார். பாடலின் நடனத்தை அஸார் வடிவமைத்துள்ளார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்பட பாடலுக்கு நிகராக, அட்டகாசமான உருவாக்கத்தில், மனதை கொள்ளை கொள்ளும் இந்தப்பாடல் வெளியான வேகத்தில், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று, வைரலாகி வருகிறது. மேலும் அனைத்து இசைத் தளங்களிலும் சார்ட்பஸ்டர் லிஸ்டிலும் இடம்பிடித்து வருகிறது.

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.