32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சேத்துமான் புகழும், உறியடி விஜயகுமாரும்

Dinesh R சேலம் Published: 12/07/2022 1 நிமிட வாசிப்பு Updated: 14/07/2022 சினிமா
எழுத்து அளவு:

உறியடி விஜய் குமார், ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்பப் பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது.

இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாகத் தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

’96 படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். C.S.பிரேம் குமார் படத்தொகுப்பாளராகவும், ஸ்டன்னர் சாம் சண்டைப் பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்களை எழுதியுள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.