டன்கி விமர்சனம்
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான், டாப்ஸி பானு, பொம்மன் இரானி, விக்கி கெளஷல் மற்றும் பலர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானியின் ராஜ்குமார் ஹிரானி ஃப்லிம்ஸ் மற்றும் கெளரிகானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “டன்கி” ஆகும்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியாகும் படம் என்றாலே அப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது. ஏனென்றால் அவரின் முந்தைய படைப்புகளான ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’, ‘லகோ ரகோ முன்னா பாய்’, ‘3 இடியட்ஸ்’, ‘பி.கே’ மற்றும் ‘சஞ்சு’ இவையெல்லாம் இந்தியத் திரையுலகிலும், இந்திய ரசிகர்கள் மனதிலும் ஏற்படுத்திய தாக்கம் அப்படிப்பட்டது. அதுமட்டுமின்றி 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலோச்சி வரும் கிங் கான் ஷாருக் பதான், ஜவான் என தொடர்ச்சியாக இரண்டு மெகா ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்துவிட்டு ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்திரு...