32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’

Dinesh R சேலம் Published: 04/02/2019 1 நிமிட வாசிப்பு Updated: 08/04/2019 சினிமா
எழுத்து அளவு:

Mr.Local---SK

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் “மிஸ்டர் லோக்கல்”.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“இந்தப் படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு “மிஸ்டர் லோக்கல்” என்கிற தலைப்பு தான் பொருத்தும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும். எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில்தரும் சக்தி மிகவும் பாசிடிவ் ஆனது. அவரது எனர்ஜியைப் பார்க்கும் போது, அவருடன் போட்டிப் போடவேண்டும் என்கிற ஆசை ஒரு இயக்குநராக எழுந்தது.

கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம். திரையில் அவர் அற்புதங்கள் செய்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களுக்கு ஒரு மிகப் பெரிய தூண். அவரது செயல் திறனும், ஒரு கடை நிலை தொழில்நுட்பக் கலைஞரிடம் கூட அவர் வைத்து இருக்கும் தொழில் ரீதியான உறவு அவரது வெற்றிக்கு விதை என்றால் மிகை ஆகாது.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. போஸ்ட் ப்தொடக்ஷன் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறைக்கு ‘மிஸ்டர் லோக்கல்’ திரைக்கு வர ஏற்பாடுகள் துரித வேகத்தில் நடக்கிறது” என்றார் இயக்குநர் ராஜேஷ்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.