32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

செப்டம்பர் 1 முதல் இந்தி ‘சூரரைப் போற்று’

Dinesh R சேலம் Published: 21/03/2023 2 நிமிட வாசிப்பு Updated: 22/03/2023 சினிமா
எழுத்து அளவு:

தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்திப் பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. தமிழில் வெளியான இந்தத் திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை அபன்டண்சியா எண்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் 2 டி எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அருணா பாட்டியா, ஜோதிகா, சூர்யா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ‘புரொடக்சன் 27’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த இந்தித் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று ‌உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனிடையே இந்தித் திரையுலகில் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் சூர்யா-ஜோதிகா தம்பதியர், தமிழில் பெற்ற வெற்றியை விடக் கூடுதலான வெற்றியைப் பெறுவர் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.