32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

LKG – ஸ்ருதிஹாஸன் பாடிய பாடல்

Dinesh R சேலம் Published: 19/02/2019 2 நிமிட வாசிப்பு Updated: 20/02/2019 சினிமா
எழுத்து அளவு:

Sruthi-Hasan-song-in-lkg

அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களைப் பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களைப் பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டிப் பிரபலமானதாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஆர்.ஜே. பாலாஜியின் ‘LKG’ படத்தின் டிரெய்லர், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, நியூஸிலாந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்ருதிஹாஸன் பாடிய சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டிருப்பது இந்தத் திரைப்படத்திற்கு ஒரு பெரிய பூஸ்டாக மாறியிருக்கிறது. கூடுதலாக, LKG படக்குழு ட்விட்டர் இந்தியாவில்  படத்தின் ப்ரமோஷன் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இயக்கநர் கே.ஆர் பிரபு கூறும்போது, “இதுபோன்ற எதையும் நாங்கள் முன்னதாகத் திட்டமிடவில்லை. இது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. வெகுஜனங்களிடையே திரைப்படத்தை கொண்டு சேர்க்க பல தனித்துவமான, சிறப்பு உத்திகளைக் கையாளும் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் சார் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு மட்டுமல்ல, அவர் தயாரிக்கும் அனைத்துப் படங்களுக்கும் தனித்துவமான விளம்பரங்களைச் செய்கிறார். அவர் தயாரித்துள்ள LKG குழுவில் பங்கு பெற்றது எங்கள் அதிர்ஷ்டம். எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களின் வெற்றிக்குக் காரணமாக இருப்பதோடு, படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார்கள் ரசிகர்கள். ட்ரெய்லர் மற்றும் பாடல்களைப் பற்றிய பாராட்டுகளைக் கேட்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார். 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ராம்குமார், ஜே.கே.ரித்தீஷ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார். பா.விஜய் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் வரிகளுக்கு லியான் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.