
விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில், ‘அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட்’ மற்றும் ‘7C’s என்டர்டெயின்மென்ட் ப்ரைவேட் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமரிசையாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் தத்தோ திரு.சரவணன் அவர்களும் மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சந்திரன் ராமமூர்த்தி அவர்களும் இணைந்து வெளியிட்டனர்.
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது. கூடிய விரைவில் ரிலீசாக தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது.