Shadow

டாணா – தமிழகத்தின் செல்லக்குரல்

Taana---Vaibhav

வித்தியாசமாக, அதே சமயம் தனக்கேற்றது போன்ற கதைகளைத் தெர்ந்தேடுத்து நடித்து வருகிறார் வைபவ். ஜூலை 22 அன்று வெளியான டாணா படத்தின் டீசரே அதற்குச் சான்று.

போலீஸ் குடும்பத்தில் பிறந்த நாயகன் உணர்ச்சி வசப்பட்டால் அவனது குரல் பெண் குரலாக மாறிவிடும் எனும் வித்தியாசமான கதைக்களத்தைத் தொட்டுள்ளார் இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி. அதைச் சுட்டிக் காட்டும் வகையில், “இந்தக் குரலை வச்சிக்கிட்டு நீ பாடுன்னா, கிராண்ட் ஃபினாலே வரைக்கும் போகலாம். சின்னக்குயில் சித்ரா கிட்ட நான் பேசுறேன்” என்று டீசரில் யோகிபாபுவின் டைமிங் வசனம் அதகளம். இப்படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்க, பாண்டியராஜன், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – நோபல் மூவீஸ் ப்ரொடக்ஷன்ஸ்
>> தயாரிப்பு – எம்.சி. கலைமாமணி & எம்.கே.லக்ஷ்மி கலைமாமணி
>> எழுத்து, இயக்கம் – யுவராஜ் சுப்ரமணி
>> இணை தயாரிப்பு – எச்.சனாவுல்லா கான், பிரசாந்த் ரவி, எஸ்.சந்தோஷ் ஆகியோர்
>> தயாரிப்பு நிர்வாகம் – தண்டபாணி
>> நிர்வாக தயாரிப்பு – வி.சுதந்திரமணி
>> லைன் புரொடியூசர் – அருண் கே விஸ்வா
>> இசை – விஷால் சந்திரசேகர்
>> ஒளிப்பதிவு – சிவா ஜி.ஆர்.என்
>> படத்தொகுப்பு – பிரசன்னா ஜி.கே.
>> கலை – பசார் என்.கே. ராகுல்
>> சண்டை – வி.கோட்டி
>> பாடல் – கு. கார்த்திக் & தனிக்கொடி
>> உடை – கீர்த்தி வாசன்
>> நடனம் – சதீஷ்
>> ஆடியோகிராஃபி– டி.உதயகுமார்
>> இணை இயக்குநர் – எஸ்.ராதாகிருஷ்ணன்
>> VFX – ஆர்.மூர்த்தி
>> மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா