Search

பிக் பாஸ் 3 – நாள் 32

Cheran-Bigg-Boss

அதே கக்கூஸ், அதே கவின், அதே லியா, அதே கடலை, அதே நான், அதே நீங்க. ஏய் யப்பா, முடியலைய்யா கவினு. இடத்தையாவது மாத்தலாம். நாட்டாமைக்கு மரியாதை தருவதைப் பற்றி பிக் பாஸ் கிளாஸ் எடுத்திருப்பார் போல. டாஸ்க் ஆரம்பித்த உடனே, ஒரிஜினல் நாட்டாமை பாட்டு பாடி சேரனைக் கூட்டிட்டு வந்தார்.

இப்படியே மொக்கையாகவே போய்க் கொண்டிருக்கே என்று யோசித்த ‘டைரக்டர்’ சரவணன், ‘நான் ஒரு உண்மையைச் சொல்லப்போறேன்’ என சாண்டி, கவினை அழைத்து ஒரு கதை சொல்றார். கதைப்படி பாம்புபட்டி நாட்டாமை சேரனும், கீரிப்பட்டி நாட்டாமி மதுவும் கணவன்-மனைவி. தன் மனைவி தன்னை மாதிரியே நாட்டாமையாக ஆக வேண்டுமென ஆசைப்பட்ட போது, அதைத் தடுக்கிறதானால் இரண்டு பேரும் பிரிஞ்சுடறாங்க. அவங்களோட குழந்தை தான் லியா. இது எப்படி இருக்கு?

இதை வைத்து ஒரு ட்ராமா செய்யலாமென சேரனிடமும், மதுவிடமும் இதைச் சொல்லி, லிவிங் ஏரியால எல்லாரும் கூடி இருக்கும் போது இந்த உண்மையைச் சொல்லி, ஆளாளுக்கு பெர்ஃபாமன்ஸ் பண்ணிக் கொண்டிருந்தனர். சேரன், மது தன் பங்குக்கு நடித்துக் கொண்டிருந்தனர். அப்ப லோஸ்லியா எதையோ திருடிக் கொண்டு ஓடுகிறார். அவரைத் துரத்திப் பிடிப்பது சாக்ஷியும், மீராவும். பின்னாடியே போன சேரன், இவர்களைத் தள்ளி விட்டுவிட்டு லோஸ்லியா கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறார். ஒரு நிமிஷத்துக்குள்ள இதெல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. இந்த கேப்பில் நாட்டாமையின்ட சொம்பு, வெத்தலைப் பெட்டி இண்டுமே திருடு போகிறது.

அடுத்த காட்சியில் ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் உட்காந்திருக்க, கேப்டன் ரேஷ்மா, மீராவிடம் ஏதோ பேசவேண்டுமெனச் சொன்னார்.

லோஸ்லியா திருடிக் கொண்டு ஓடும் போது சேரன் போய்ப் பிடிச்சுக் கொண்டு வந்தார் இல்லையா? அப்பொழுது சேரன், மீராவை வயற்றில் கை வைத்துத் தூக்கி வீசியதாகவும், அது தனக்கு ஹர்ட் ஆனதாகவும் சொல்ல வேண்டிய மீரா, அதைச் சொன்ன விதத்தினால் தான், நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறார்.

“நான் இந்த வீட்டுக்கு வரும் போதே, பெண்களைக் கட்டி பிடிக்க மாட்டேன்னு சேரன் சார் சொன்னாரா? ஆனா அதுக்கப்புறம் எல்லாப் பொண்ணுங்களையும் தொட்டு தான் பழகறாரு.

நாங்க நாலு பொண்ணுங்க அங்க கட்டிப் பிடிச்சு நின்னுட்டு இருக்கோம். வேறெந்த பாய்ஸும் அங்க வரல. கவின் கூட வந்துட்டுத் திரும்பப் போய்ட்டான்.

ஆனா சேரன் சார் அங்க வந்தாரு, என் வயத்துல கை வச்சு என்னைத் தூக்கித் தள்ளி விட்டுட்டுப் போனாரு. இது எனக்கு ஹர்ட் ஆச்சு” எனச் சொல்லி முடித்த போது எல்லோருக்கும் ஷாக்.

“நீ இதை பொது சபைல சொல்றது தப்பும்மா” என சரவணன் தான் முதலில் சொன்னார். அடுத்து பேசின சேரன், “அவங்க சொன்னது உண்மைதான், ஆனா அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. உங்களைக் காயப்படுத்திருந்தா மன்னிச்சிடும்மா” எனஉடனே கேட்டுவிட்டார்.

ஆனால் மீரா பேசியதை வைத்துப் பார்க்கும் போது, சேரன் வேணும்னே இதைச் செய்ததாகஎல்லாரையும் நம்ப வைக்க பேசின மாதிரியே இருந்தது. நேரடியாகச் சொல்ல வேண்டிய விஷயத்தைத் தேவையில்லாத காரணங்களைச் சேர்த்து, கேட்கிறவங்க அதை உண்மையென நம்புகின்ற அளவுக்குப் பேசுவதில் மீரா எக்ஸ்பர்டாக இருக்கவேண்டும். இதில் சேரனுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம், இந்தச் சம்பவம் எல்லோர் முன்னாடியும் நடந்தது தான்.

திரும்பத் திரும்ப அதையே பேசிக் கொண்டிருந்ததால் சேரன் உடைந்து போய் அழ ஆரம்பித்தார். மற்ற ஹவுஸ்மேட்ஸ் எல்லோருமே அவருக்கு ஆறுதல் சொன்னார்கள்.

அந்தப் பக்கம் மீரா சொன்ன விதம் தப்பு என கவின், சாண்டி, சரவணன் இப்படி யார் சொல்லியும் மீரா கேட்கிற மாதிரி இல்லை. ‘அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை. சேரன் சார் எனக்குப் பின்னாடி தான் நின்னுட்டு இருந்தார்’ எனச் சொல்லிக் கொண்டு இருந்தார்.

இதே சம்பவம் யாரும் இல்லாதப்ப நடந்திருந்தால், கேள்வியே இல்லாமல் சேரனைக் குற்றவாளியாக்கிருப்போம். அத்தனை பேர் முன்னாடி நடந்துள்ளது, ஒரு நிமிஷத்துக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்த ஒரு விஷயத்தை, சேரன் உள்நோக்கத்தோட தான் செஞ்சார் என மீரா உறுதியாகச் சொல்கிறார். ஆனால் இப்படி செய்யலாமென நினைத்து, நடக்கறதுக்குக் கூட அந்த இடத்துல நேரமே இல்லையெனப் பார்த்த எல்லாருக்குமே தெரியும்.

கவின், சாண்டி, சரவணன் எல்லாருமே இதை மீராவுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தாலும், எதையும் காது கொடுத்துக் கேட்கவே இல்லை. முகின் பேசிக் கொண்டிருக்கும் போதே, எழுந்து போனார் மீரா. அப்ப முகினுக்கு வந்த கோபம், எனக்கும் வந்தது. பார்க்கிற எல்லோருக்கும் வந்திருக்கும். இதைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு வருகிறார் மீரா. பயங்கர எரிச்சலாக இருக்கு.

ஒரு வழியாக சமாதானம் ஆகி டாஸ்க் கன்டினியூ ஆச்சு. பாம்புப்பட்டி ஊர் திருவிழாவுக்குக் கீரிப்பட்டி மக்களை அழைத்து மரியாதை செய்தார். அதற்கப்புறம் கலை நிகழ்ச்சிகள் நடந்து, இந்த டாஸ்கும் முடிந்து, நேற்றைய நாளும் முடிந்தது.

மகாதேவன் CM