Shadow

Tag: அஞ்சல

அஞ்சல விமர்சனம்

அஞ்சல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நூற்றாண்டு விழா (1913 - 2013) காணும் 'அஞ்சல தேனீர் விடுதி'யைப் பற்றிய படமிது. ராமய்யா - முத்திருளாண்டி என தாத்தா - பேரனாக இரு பாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. படம் முழுக்க அவர் மட்டுமே தெரிகிறார். இது அவரின் படம் எனலாம் அல்லது அவரை நம்பி எடுக்கப்பட்ட படம். ராமய்யாவின் மனைவி அஞ்சலையாக மெட்ராஸ் படப்புகழ் ரித்விகா நடித்துள்ளார். காலத்திற்கேற்ப மாறும் அவர் உடைகளாலும் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் தங்கம் சரவணன். கவாஸ் என்கிற கவாஸ்கராகப் பழகிப் போன பாத்திரத்தில் விமல் (Vemal). உத்ராவாக நடித்திருக்கும் நந்திதாவுக்கும் விமலுக்குமான காதல் காட்சிகள் திராபையாக இருந்தாலும், 'கண் ஜாடை காட்டி எனைக் கவுத்த செவத்த புள்ள' பாடல் ஈர்க்கிறது. வசனங்களே படத்தின் பெரிய பலவீனம். வங்கியில் லோன் கிடைத்து விட, நாயகன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிபடுத்துகிறான். அடுத்த வரும் சின்னஞ்சிறு காட்சியில் நாயகி நாயகனி...
அஞ்சல – இரட்டை வேடங்களில் பசுபதி

அஞ்சல – இரட்டை வேடங்களில் பசுபதி

சினிமா, திரைச் செய்தி
“ஒரு டீக்கடையின் வரலாறுதான் அஞ்சல படத்தின் கதை. அந்த டீக்கடையும், அதைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பற்றிய கதை” என்றார் இயக்குநர் தங்கம் சரவணன். “நான் நடித்த படங்களிலேயே, என் மனதுக்கு மிகவும் நெருக்கமான சில படங்களில் இதுவும் ஒன்னு” என்றார் பசுபதி. தந்தை, மகன் என இரு வேடங்களில் பசுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னக் கவுண்டர், சிங்கார வேலன், எஜமான் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.வி.உதயக்குமார், இப்படத்தில் நாயகியின் தந்தையாக நடித்துள்ளார். “ஷூட்டிங் ஸ்பாட்லயே, பசுபதியின் நடிப்பைப் பார்த்து அசந்துபோய் கை தட்டினேன். அவ்வளவு அருமையாக கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இதற்கு முன், சிவாஜி சாரின் நடிப்பைப் பார்த்து கை தட்டியிருக்கேன். அதன் பின் பசுபதிக்குத்தான்” என்றார் இயக்குநர் உதயக்குமார். “நான் படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்துட்டேன். பசுபதி சார் நடிச்ச போர்ஷனைப் பார்க்கிறப்...
விமல் – நந்திதா – அஞ்சல

விமல் – நந்திதா – அஞ்சல

சினிமா, திரைத் துளி
பிரபல சண்டை இயக்குநர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில், விமலுக்கு ஜோடியாக நந்திதா நடிக்கும் அஞ்சல படத்தின் விநியோக உரிமையைப் பெற்று இருப்பவர் ஆரா (Auraa) சினிமா மகேஷ் கோவிந்தராஜ். நடிகர் விமல் உடைய படங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். சகல தரப்பினரையும் திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்ற கணிப்பை அவர் என்றுமே பொய்க்க விட்டதில்லை. அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் உருவாகும் அஞ்சல திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களைக் கவரும் வகையில் பல அம்சங்கள் படத்தில் இருந்தாலும், பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது பிரதானமான அம்சம். ‘Bangalore days’, ‘என்னு நிண்டே மொய்தீன்’ ஆகிய மலையாளப் படங்களின் இசை மூலம் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட இசை இ...