Shadow

Tag: அனிகா

மிருதன் விமர்சனம்

மிருதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிருதம் - பிணம்; மிருதன் - பிணமாய் வாழ்பவன் (ஜோம்பி) ஒரு வைரஸால் மனிதர்கள் மிருதர்களாக உருமாறுகின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அமைச்சராக வரும் R.N.R. மனோகர், அவரது அறிமுகக் காட்சியைத் மற்ற காட்சிகளில் எல்லாம் அதகளப்படுத்துகிறார். செக் போஸ்ட்டில் அவர் கெத்து காட்டி விட்டு, ஜெயம் ரவியைப் பார்த்து, "இதுக்குத்தான் தம்பி அரசியலில் கொஞ்சம் டச் வேணுங்கிறது" எனும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. அதே போல், காளி வெங்கட்டின் சுடும் திறமைக்கும் சிரிப்பொலி எழுந்து அடங்குகிறது. ட்ராஃபிக் போலிஸ் கார்த்தியாக ஜெயம் ரவி ஜம்மென்று இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா அண்ணன் தான் என்றாலும், தங்கை அனிகாவின் (என்னை அறிந்தாலில் த்ரிஷாவின் மகள்) க்யூட்னெஸால் அதுவும் ரசிக்கும்படி இருக்கிறது. மிருதர்கள் சுடப்படும் பொழுது, அவர்கள் வெறும் நோயாளிகள் என்று பரிதாபப்படும் மருத்துவர் ரேனுகா, க்ளை...
என்னை அறிந்தால்… விமர்சனம்

என்னை அறிந்தால்… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா? காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. சாதாரணமாகவே தன் படத்தில் நடிக்கும் நாயகர்களை பளிச்சென மாற்றிவிடுவார் கெளதம். அஜித் கிடைத்தால்? மீசையை கச்சிதமாக வெட்டியிருக்கும் இளமையான அஜித், தாடி வைத்த அஜித், தலை நரைத்த அஜித் என விதவிதமாய் அஜித்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். கா...