Shadow

Tag: அரவிந்த் ஆகாஷ்

குற்றம் 23 விமர்சனம்

குற்றம் 23 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
23 குரோமோசோன்களை மையப்படுத்தி நடக்கும் மெடிக்கல் க்ரைம் தான் படத்தின் கதை. நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைத்துள்ளார் ஈரம் பட இயக்குநரான அறிவழகன். படத்தின் டைட்டில் போடும் பொழுதே கதை தொடங்கி விடுகிறது. டைட்டிலின் ஊடே வரும் அனிமேஷன் மிக அற்புதமாக உள்ளது. ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை அடைந்து கருவாய் உரு கொள்வதை அனிமேஷனாக்கி உள்ளனர். இதயம், கை, கால், விரல்கள் என ஒவ்வொன்றாய்த் தோன்றி, கருவிலுள்ள சிசு புன்னகைக்கும் பொழுது பரவசமாய் உள்ளது. தேவையற்ற அறிமுகங்கள் இல்லாமல், நேரடியாகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். வில்லிவாக்கம் சர்ச்சின் பிரம்மாண்டத்தை தன் கேமிரா கோணத்தால் ரசிக்கும்படி அமைத்துள்ளார். படத்தில் வரும் அனைத்து ஷாட்ஸுமே ரசிக்க வைக்கின்றன. கலை இயக்குநர் ஷக்தியின் பங்கு மகத்தானது. படம் நெடுகே, கதைக்கும் கதை நடக்கும் இடத்திற்கும் இயை...
கண்ல காச காட்டப்பா விமர்சனம்

கண்ல காச காட்டப்பா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடக்கத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டாலும், கலகலப்பான படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் மேஜர் கெளதம். எம்.எஸ்.பாஸ்கரும், யோகி பாபுவும் தமது டைமிங் சென்ஸாலும், மாடுலேஷனாலும் 2 மணி நேரத்திற்கும் குறைவான படத்தைக் கரையேற்றியுள்ளனர். கழிவறை கட்டும் திட்டத்தில் தமிழக அமைச்சர் ஊழல் செய்து சுருட்டிய 100 கோடியைக் கொலம்பியா வங்கியில் டெப்பாசிட் செய்ய, முதற்கட்டமாக ஹவாலா மூலம் மலேஷியா அனுப்பி வைக்கப்படுகிறது. அப்பணத்தை நாயகன், நாயகிகள், நகைச்சுவை நடிகர்கள் என மொத்தம் 8 பேர் திருட முனைகின்றனர். அமைச்சரின் பணம் யார் கையில் சிக்குகிறது என்பதுதான் படத்தின் கதை. கெட்டவனாக யோகி பாபு. டானாக (Don) வரும் கல்யாண் மாஸ்டரின் உதவியாளாக வருகிறார். படத்தில் சகட்டுமேனிக்கு அனைவரையும் கலாய்க்கிறார். "இருபது கோடி!!" என அதிசயித்து, "டொன்ட்டி லேக்ஸ்" என அவர் முடிக்கும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது...
மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

சினிமா, திரைச் செய்தி
ப்ரேக் டான்ஸராக இருந்து நடிகராக மாறிய ‘மேஜர்’ கெளதம் தற்போது இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்நேரத்தில் ‘மேஜர்’ கெளதமும் அவரது குழுவும் மட்டும் மகிழ்ச்சியாக உள்ளனர். காலத்தின் அவசியம் உணர்ந்த வைக்கப்பட்டது போல், “கண்ல காச காட்டப்பா” என அவர்களின் படத் தலைப்பு அமைந்துவிட்டதே அதற்குக் காரணம். தலைப்பு மட்டுமன்று, படத்தின் கருவும் கறுப்புப் பணத்தை மையப்படுத்தியே! படத்தைப் பார்த்து விட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, “இரண்டரை மணி நேரம் ரசிகர்கள் கலகலப்பாக இருக்கப் போவது உறுதி” என்கிறார். S.G.சேகர் என்பவர் கதையை, இயக்குநர் கெளதம் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். ‘ஹெலிகேம் (Helicam)’ ஷாட்ஸ்கள் படத்தில் பிரமாதமாக உள்ளதென ஒளிப்பதிவாளர் அரவிந்தைப் பாராட்டினார் வெங்கட்பிரபு. படத்தின் நாயகனான அரவிந்த் ஆகாஷும், “மலேஷியாவில்...