
பல்டி விமர்சனம்
மெட்ராஸ்காரன் படத்துக்குப் பிறகு ஷேன் நிகாம் தமிழில் மீண்டும் நடித்திருக்கும் படம் பல்டி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். சாந்தனு, செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் தான் சாய் அபயங்கர் இசையில் வெளியாகும் முதல் திரைப்படமாகும்.
தமிழக, கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் இரண்டு நண்பர்கள் கபடி வீரர்களாவர். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடி வெற்றிகளைக் குவிக்கிறார்கள். அதே பகுதியில் விதவிதமான வட்டித் தொழில் செய்து வரும் மூன்று கேங்குகள் இடையே கடும் தொழில் போட்டி நிலவுகிறது. செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் பூர்ணிமா இந்த மூன்று கேங்குமே ஒருவரை ஒருவர் அழிக்கக் காத்திருக்கின்றனர். ஒரு கட்டத்த...


